பக்கம்:சூரப்புலி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கொடுக்கும் பொழுது அது என்றும் காணுத ஓர் இன்பத்தைக் கண்டது. குருடனுக்கும் தன் அன்பு உணர்ச்சியை வெளிப்படுத்த ஓரிடம் தேவையாக இருந்தது போலும். மனித இனத்திலே. ஒரு வரிடமும் அவன் அன்பு செலுத்த முடியவில்லே. அந்தத் தடிப்பையன் ஏதோ பிச்சையெடுப்பதற்கும் சோறு வாங்கித் தின்பதற்கும் இடம் விட்டு இடம் போவதற்கும் உதவியாக இருந்தானே ஒழிய அன்பைப் பெறுவதற்கு வேண்டிய குணம் அவனிடத்திலே இல்லை. வேல் செப்பாமல் குருடன் வாங்குகின்ற பிச்சையிலே காலத்தைக் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் அவன் குருடைேடு இருந்தான். ஒருவனுடைய உதவி மற்றவனுக்கு வேண்டியிருந்தது. அதனல் அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அன்பு அவர்களேச் சேர்த்து வைக்க வில்லை. எனவே, குருடன் அந்தப் பையனிடம் தனது அன்புணர்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லே. அவனுடைய அன்புணர்ச்சியைச் சூரப் புலியிடம் வெளிப்படுத்தின்ை. அதனல் மகிழ்ச்சியடைந்த சூரப்புலி அவைேடு கூடவே இருக்க விரும்பிற்று. காரமடைத் திருவிழா முடிந்த பிறகு குருடன் தனது முக்கிய இருப்பிடமாகிய கோயம்புத்துாருக்குப் புறப்பட்டான். தடிப்பையன் ஒரு மூங்கில் குச்சியின் ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு மற்ருெரு நுனியைக் குருடன் கையில் அலட்சியமாக வைத்தான். குருடன் அதைத் தன் வலக்கையிலே கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். இடக்கையிலே மற்ருெரு கோல்ப் பிடித்து நிலத்திலே ஊன்றிக் கொண்டு நடக்கத் தயாராயினன். பையன் பலவிதமான குறும்புகள் செய்துகொண்டு முன்னல் நடந்தான். குரப்புலி குருடைேடு பக்கத் திலேயே நடந்தது. அடுத்த நாள் மாலேயிலிருந்து கோயம்புத்தூரிலே சூரப்புலியின் வாழ்க்கை தொடங்கிற்று. சிறுவனுடைய உதவியைக்கொண்டு குருடன் வீதிவீதியாகச் சென்று பிச்சையெடுப்பான். சூரப்புலி கூடவே செல்லும். உச்சிவேளை வரையிலும் உணவுக்காக வீட்டுப் பக்கங்களிலே பிச்சையெடுப்பார்கள். மாலேயிலே கடைவீதியிலே குருடன் காசு கேட்டுக் கையேந்தி நிற்பான். ஆனல் மாலே ஐந்தரை மணியானவுடன் தடிப்பையனுக்கு அன்றைய வரும்படியில் ஜம்பது காசு கொடுத்துவிடவேண்டும். கூடையிலே பலகாரம் விற்கும் கிழவியிடத்திலே கார வடை, சுண்டல், முறுக்கு வாங்கித் தின்பதற்கும் னிமாவுக்குப் போகவும் இந்தப் பணம் அவனுக்கு. ஒரு நாள் கொடுக்கத் தவறிலுைம் பையன் இடக்குச் செய்ய ஆரம்பித்து சூ - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/52&oldid=840615" இலிருந்து மீள்விக்கப்பட்டது