பக்கம்:சூரப்புலி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அதன் உள்ளத்திலே சந்தேகமும் பயமும் இருந்தாலும், பசி தாங்க முடியாமல் மெல்ல மெல்லச் சிறுவன நோக்கி அடியெடுத்து வைத்தது. அதைச் சிறுவன் மாளிகைக்குள்ளே அழைத்துச் சென்ருன். அத்தனே பெரிய மாளிகைக்குள் அந்த நாய்க்குட்டி இது வரையிலும் காலெடுத்து வைத்ததேயில்லே, தயங்கித் தயங்கி எச்சரிக்கையோடு முன்னல் சென்றது. சிறுவன் தன் ஜேபியிலிருந்த பிஸ்கோத்து ஒன்றை அலட்சியமாக எடுத்து, அதன் முன்னல் வீசி யெறிந்தான். நாய்க்குட்டி ஆவலோடு வாலேக் குழைத்துக்கொண்டு அதைத் தன் வாயில் கவ்விற்று. அந்தச் சமயத்திலே சடையன் மறுபடியும் வெளியே வந்து விட்டது. அதைக் கண்டதும் நாய்க்குட்டி வீல் என்று கத்திக் கொண்டும் வாலே இடுக்கிக்கொண்டும் ஒட்டம் பிடித்தது. சிறுவன் வாய்விட்டு உரக்கச் சிரித்துக்கொண்டு குதித்தான், ஆல்ை அவன், அந்த நாய்க்குட்டியை ஒடிப்போக விட்டுவிடவில்லை. தெரு வழியாக ஒடி மீண்டும் ஒரு பிஸ்கோத்தை அதற்குப் போட்டான். அப்படியே மெதுவாக அதை மாளிகைக்கு அழைத்து வந்துவிட்டான். சடையனக் கண்டு அது பயந்து அலறுவதிலே அந்தச் சிறுவனுக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்காக அதை அவன் மாளிகை யிலேயே வைத்துக்கொண்டான். இவ்வளவு பயந்து அலறுகின்ற நாயை அவன் கண்டதேயில்லே. பயம் மிகுந்த அந்த நாய்க்குட்டிக்கு வேடிக்கையாகச் சூரப்புலி' என்று பெயர் வைத்தான். சூரப்புலியின்மீது சடையன் அடிக்கடி உறுமிக்கொண்டு பாய வரும். அந்தச் சிறுவனுடைய உத்தரவுப்படிதான் அது அப்படிப் பாய்ந்தது. வாலேக் கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொண்டும், வீல் என்று அலறிக்கொண்டும் சூரப்புலி, நாற்கால் பாய்ச்சலில் மாளிகையை விட்டு வெளியே வேகமாக ஓடும், கைதட்டிக் கொண்டு சிறுவன் சிரித்துக் கூத்தாடுவான். அவன் வீட்டிற்குச் செல்லப்பிள்ளை. அவன் என்ன செய்தாலும் யாரும் என் என்று கேட்கமாட்டார்கள். ஒரே மகன். அதிலும் பணம் நிறையச் சம்பாதித்தவருடைய மகன். பையனுடைய தகப்பனர் பாக்கு வியாபாரி. மேட்டுப்பாளையத்திற்குப் பக்கத்திலே, நீலகிரி மலேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/6&oldid=840624" இலிருந்து மீள்விக்கப்பட்டது