பக்கம்:சூரப்புலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அலறித் துடித்துக்கொண்டு எதும் செய்ய முடியாமல் கிடந்தான். இதற்குள் மற்ருெருவன் போத்தனூர்ச்சாலே வழியாகக் கொஞ்ச தூரம் ஓடிப் பக்கத்தில் குளக்கரையிலிருந்த ஒரு பெரிய அரச மரத்தடியில் ஒளிந்துகொண்டான். வேருெருவன் போத்தனுரை நோக்கிச் சால் வழியாகவே ஓடினன். அப்படி ஓடுகிறவனேச் சூரப் புலி பார்த்துவிட்டது. உடனே அவன்மேல் பாயப் புறப்பட்டது. அந்தச் சமயத்தில் அரச மரத்தடியில் ஒளிந்திருந்தவன், தன் கையிலிருந்த குத்தீட்டியை அதன்மீது குறி பார்த்து வீசின்ை. அந்த ஈட்டி சூரப்புலியின் வயிற்றிலே பாய்ந்துவிட்டது. சூரப்புலி சட்டியை வாயால் கவ்வி எடுக்க முயன்றது. ஆனல், அதற்குள் அதற்கு மயக்கமேற்பட்டது; தலே சுழன்றது. அப்படியே மூச்சுத் திணறி நடுச்சாலேயில் தளர்ந்து விழுந்தது. வயிற்றிலிருந்து ரத்தம் குபுகுபுவென்று பொங்கிச் சாலையில் வழியலாயிற்று. சூரப்புலி தன் உணர்வை இழக்கும் தறுவாயில் திடீரென்று ஒரு மோட்டார்கார் சாலேயின் வழியாக வேகமாக வந்து அதற்குச் *ற்று முன்னுல் நின்றது. கானகத்திலே குகைக்கு வந்து உதவி செய்த அதே துறவி காரிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கிச் சூரப்புலியின் அருகில் ஓடிவந்தார். அதன் வயிற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/60&oldid=1276978" இலிருந்து மீள்விக்கப்பட்டது