பக்கம்:சூரப்புலி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சூறப்புலி பாலே உற்று நோக்கிற்று. அந்தப் பாலே வட்டிலில் ஊற்றிடி துறவியையும் கூர்ந்து கவனித்தது. நீலகிரி மலேச்சாரலிலே குகை; குள்ளே பின்னங்கால்கள் இரண்டும் ஒடிந்து தவித்துக்கொண்டிருந்து காலத்திலே தனக்கு உதவி செய்ய வந்த அதே துறவிதான் இவi என்று அது முன்பே தெரிந்துகொண்டிருந்தது. அப்படித் தெரிந்து தால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியையும் நன்றியையும் கொண்டிருந்தது. ஆனால், அந்த உணர்ச்சிகள் மேலோங்கி நிற்க முடியாதவாறு அதன் உள்ளத்திலே குருட்டுப் பிச்சைக்காரனப்பற்றிய எண்ணங்கள் குமுறிக்கொண்டிருந்தன: துறவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே அவர் ஊற்றிய பாறேக் குடிக்க வேண்டும் என்று அது விரும்பியபோதிலும் அதல்ை அப்படிக் குடிக்க முடியவில்லே. குருட்டுப் பிச்சைக்காரனுடைய நினைப்பு அதைத் தடுத்துவிட்டது. அவன் படுத்திருந்த மண்டபத்திற்கு உடனே போக வேண்டுமென்ற ஆர்வம் பசியையும் உடல் வேதனை யையும் சோர்வையும் நன்றி உணர்ச்சியையும் மீறிக்கொண்டு மேல் எழுந்தது. சூரப்புலி மெதுவாக அந்த மாடி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டது. அந்தப் பகுதியிலெல்லாம் சூரப்புலிக்கு நல்ல பழக்கம் உண்டு. சோறு பிச்சையெடுக்கக் குருடைேடு பல முறைகள் அங்கு வந் துள்ளது. ஆகவே, அங்கிருந்து வாளாங்குளத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கோவிலுக்குப் போவதில் எவ்வித இடையூறும் அதற்குக் கிடையாது. சட்டிக் குத்தால் ஏற்பட்ட காயத்தில்ை உண்டாகும் வலியைப் பொருட்படுத்தாமல் அது நடந்தது துறவி யும் விலங்கு வைத்தியரும் பின்தொடர்ந்தார்கள். துறவியின் ஏற்பாட்டின்படி அவர் வாளாங்குளத்தை அடைவதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டரும் வேறு சில போலீஸ்காரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். சூாப்புலி ஆவலோடு கோயில் மண்டபத்திற்குள் நுழைந்தது. சுற்றிச்சுற்றி முகர்ந்து முகர்ந்து பார்த்தது. குருட னுடைய மண்டையிலிருந்து வெளிப்பட்ட ரத்தம் தோய்ந்த பகுதியைக் கண்டதும் அது தக்லயை நிமிர்த்திக்கொண்டு ஓவென்று ஊளையிட்டு அழுதது. துறவி அதைக் கட்டி அணைத்துக்கொண்டு முகத்தின் மேலே தடவிக் கொடுத்தார். துறவியின் கண்களிலே என்றுமில்லாதவாறு கண்ணிர்த்துளிகள் முத்துக்களேப்போலப் பிதுங்கின. அந்தக் கண்ணிர் சூரப்புலிக்குப் பெரிய ஆறுதல் அளித் திருக்க வேண்டும். அது மறுபடியும் ஓவென்று நீண்ட சோகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/63&oldid=840628" இலிருந்து மீள்விக்கப்பட்டது