பக்கம்:சூரப்புலி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 | குரலில் கூவிற்று. "இனிமேல் அவரை இந்த உலகத்திலே பார்க்க முடியாது. அவருக்குப் பதிலாக நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று குழந்தைக்குச் சொல்வது போலத் துறவி பரிவோடு தம்மை மறந்து பேசினர். சூரப்புலியின் உள்ளத்திலே அவருடைய வார்த்தைகள் புதிய உணர்ச்சியை உண்டாக்கியிருக்க வேண்டு மென்று தோன்றிற்று. அது அந்த இடத்திலே குருடன் வழக்க மாகப் படுக்கின்ற பகுதிகளுக்குச் சென்று, கொஞ்ச நேரம் மெளன மாக அசைவின்றிப் படுத்திருந்தது. அதற்குக் கொடுக்கப் பால் கொண்டுவந்து வைக்கும்படியாக முன்னதாகவே துறவி ஏற்பாடு செய்திருந்தார். குத்தீட்டியால் குத்தப்பட்டு சத்தம் வழிந்ததாலும் காயத்தின் வலியாலும் மூன்று நாள்களாக உணவருந்தாததாலும் அது மிகவும் சோர்ந்திருந்தது. அதைக் கருதியே பால் கொண்டுவரும் படி துறவி எற்பாடு செய்திருந்தார். ஆணுல், அப்பொழுதும் சூரப் புலி பாலைத் தொடவில்லை. நன்றியறிதலோடு துறவியைப் பார்த்துக் கொண்டு ஒன்றிரண்டு முறை மெதுவாக வால்க் குழைத்தது. பிறகு மெதுவாக எழுந்து, கோயிவிைட்டு வெளியே வந்து, போத்தனூர்ச் சாலேயிலே மோப்பம் பிடித்துக்கொண்டே சென்றது. போலீஸார் பத்திரமாக எடுத்து வைத்திருந்த சட்டியை அதன் முன்னல் போட் டார்கள். அதை அது பல தடவை நன்ருக முகர்ந்து பார்த்தது. பிறகு அந்த சட்டியை வீசியவன் மறைந்திருந்த மரத்தடியில் சென்று மோப்பம் பிடித்தது. மீண்டும் கோயிலுக்கு முன்பாக வந்து, அது முன்பு மார்பிலும் துடையிலும் கடித்த மனிதன் விழுந்துகிடந்த இடத்திலே மோப்பம் பிடித்தது. அங்கிருந்து சாலேயோரமாகக் குளத்திற்குப் போடப்பட்டிருக்கும் உயரமான மண்கரையின் வழி யாகக் குனியமுத்தூரை நோக்கி நடந்தது. துறவியும் வைத்தியரும் இன்ஸ்பெக்டரும் அதைப் பின் தொடர்ந்தார்கள். சூரப்புலி மோப்பம் பிடித்துக்கொண்டே தயங்காமல் சென்றது. சில இடங்களிலே அது குளத்திற்கு உள்ளேயிறங்கித் தண்ணீர் வற்றி வண்டல் 'டித்திருக்கும் பகுதியின் வழியாக நடந்தது. அங்கு வந்ததும் இரண்டு பேர் நடந்து சென்றிருந்த காலடிச் சுவடுகளையும். ஏதோ ஒன்றை அவர்களுக்கு மத்தியில் இழுத்துக்கொண்டு போனதுபோல் தோன்றும் தரையையும் துறவியும் இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் கண்டார்கள் யார் கண்ணிலும் படாமல் செல்வதற்காக அப்படிக் குளத்திற்குள் இறங்கி நடந்திருக்கிருர்கள் என்று தோன்றிற் று. சத்தக்கறைகளும் ஒரு சில இடங்களில் காணப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/64&oldid=840629" இலிருந்து மீள்விக்கப்பட்டது