பக்கம்:சூரப்புலி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . . கமுகு மரங்கள ஏராளமாகச செழித்து வளர்கின்றன. அந்த மரங்களிலே குல் குலேயாகக் காய்த்துத் தொங்கும் பாக்குக் காய்களே, கமுகுத்தோட்டங்களின் சொந்தக்காரர்களிடமிருந்து வாங்கி, வெளியூர்களுக்கு அனுப்புவது, அவருடைய தொழில். தோட்டக் காரர்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமான வரும்படி இவருக்குண்டு. இவ்வாறு சம்பாதித்த பணத்தைக்கொண்டு, பெரிய மாளிகை கட்டி, அவர் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தார். பாக்கு வியாபாரிக்குப் பகலெல்லாம் கடையிலே வேயிைருக்கும், அதஞல் அவருக்குத் தம் மகனேக் கவனிக்க நேரமில்லை. பெரிய மாளிகையிலே குடும்பம் நடத்துகின்ற அம்மாளுக்கோ வேலைக்காரர் களையும் வீட்டுக் காரியத்தையும் மேற்பார்வை செய்யவே நேரம் போதாது. அதல்ை அந்தச் சிறுவன் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தான். சடையைேடும் சூரப்புலியோடும் விளையாடுவதும், வேடிக்கை செய்வதும் அவனுடைய வே.ை சடையனுக்கு அவைேடு விளையாடுவதில் எப்பொழுதும் விருப்பம்தான், ஆனல் குரப்புலியின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது. சடையனின் கொழுத்த உருவத்தையும், பயங்கரமான உறுமலேயும் கண்டு அது சதா நடுங்கிக்கொண்டிருந்தது. மாளிகையை விட்டு ஓடிப்போகவும் அதற்கு விருப்பம் இல்லே. ஒடிப்போல்ை சோற்றுக்கு எங்கே போவது? முன்னல் பட்டினி கிடந்ததே போதும். பணக்காரச் சிறுவன், அதற்குப் பயங்காட்டி வேடிக்கை செய்தாலும் பிஸ்கோத்து நிறையக் கொடுக்கிருன். குறித்த வேளைக்கு மாளிகையிலே உணவு கிடைக் கிறது. பல சமயங்களிலே சடையன் சூரப்புலியின் பங்கான உணவையும் அபகரித்துக்கொள்ளும். எத்தனே உணவு வைத்தாலும் கொழுத்திருந்த அந்த நாய்க்குத் திருப்தி ஏற்படாது. வேலைக்காரன் எமாந்த சமயத்தில் சூரப்புலியை விரட்டி முடுக்கிவிட்டு, அதன் பங்கையும் தின்றுவிடும். அப்படியிருந்தாலும், குரப்புலி, தொடர்ந்து பட்டினியாகக் கிடக்கவில்லே. ஒவ்வொரு தடவையும் வேலைக்காரர் கள் ஏமாறமாட்டார்கள். அதல்ை ஒருவேளே பட்டினி கிடந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/7&oldid=840635" இலிருந்து மீள்விக்கப்பட்டது