பக்கம்:சூரப்புலி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தண்கள் உலகப் பொருள்களைப் பார்த்ததாகத் தோன்றவில்லை. கால் தள் மட்டும் பழக்கத்தாலோ என்னவோ பாதையில் சரியானபடி நடந்து அருவியை நோக்கிச் சென்றன. துறவியின் நிக்லயைக் கண்டு சூரப்புலிக்குப் பயம் பிடித்துக் கொண்டது. கொடிய விலங்குகள் நடமாடும் அந்த இரவிலே மெய் மறந்து செல்லும் துறவியைக் காப்பது தனது கடமை என்ற உணர்ச்சியோடு அது நாலு பக்கமும் திரும்பித் திரும்பி எச்சரிக்கை யோடு பார்த்துக்கொண்டே நடந்தது. அதன் காதுகள் சிறிய ஒலியையும் கேட்கும்படியாக நெரித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றன. கரடியொன்று கறையான் புற்றைப் பறித்து, அதில் தன் வாயை வைத்துக் கறையான்களை வேகமாக உறிஞ்சித் தின்னும் சத்தம் பக்கத்திலே பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. துறவி மெது வாக அருவியின் கீழ்ப்பகுதியை அடைந்து, தமக்கு விருப்பமான அந்த மேடைபோன்ற பாறைமீது அமர்ந்தார். சூரப்புலி அவருக்கு இடப்பக்கத்திலே அவர் கைக்கு அருகில் படுத்தது. அதன் கண்கள் சுற்றிலும் ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தன. தடதடவென்று அதிரும் நீர்வீழ்ச்சியின் ஒலிக்கு மாறுபட்ட வேறு ஒலி எதாவது உண்டாகின்றதா என்றும், மரக்கூட்டத்தினிடையே அசைவு உண் டாகின்றதா என்றும் அது உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தது. நிலவின் ஒளிபட்டு மேலிருந்து கீழே வெண்னுரையோடு விழுகின்ற ஆறு ஒரு மாயக்காரிபோல விளங்கியது. மாயக்காரி எதோ மந்திரத்தை வேகமாக முணுமுணுப்பதுபோல அதன் ஒசை கேட்டது. சுற்றிலும் இருந்த மரக்கூட்டங்கள் அந்த மந்திரத்திலே கட்டுப்பட்டு அசைவற்று நின்றன. தனிமையின் வசீகர சக்தி அந்த இடத்திலே நன்ருக விளங்கியது. அந்தத் தனிமையிலே கலந்து விட்டவர்போலத் துறவி தம்மை மறந்து இயற்கையோடு இயற்கை யாக மாறி அசைவற்றிருந்தார். ஓம் ஓம் என்ற மந்திரம் அவருடைய வாயில் இருந்து ஒவ்வொரு சமயத்தில் வெளிப்பட்டு அருவியின் முழக்கத்தோடு கலந்து எங்கும் ஒரு சாந்தியை உண்டாக்கியது. அந்தச் சமயத்திலே இரண்டு புலிகள் ஆணும் பெண்ணுமாக எதிர்க்கரையிலே மரக்கூட்டத்திற்கிடையே தோன்றின. இயற்கை அழகிலே மெய்ம்மறந்து அதனுடன் கலந்திருக்கும் துறவியையும் அவர் பக்கத்திலே படுத்திருக்கும் நாயையும் அவை உற்றுப் பார்த்தன. அவற்றின் காதுகள் நெரிந்தன. வால் நுனிகள் சுருண்டு பாய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தன. சூரப்புலி இவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/72&oldid=840638" இலிருந்து மீள்விக்கப்பட்டது