பக்கம்:சூரப்புலி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 சென்னேயில் மேலும் பல புதிய அனுபவங்கள் காத்துக்கொண் டிருந்தன. அங்கே ஓர் எளிமையான சாதுக்களின் மடத்திற்குத் துறவி சூரப்புலியை அழைத்துக்கொண்டு சென்ருர் ரயில் நிலையத்தி லிருந்து மடத்திற்குச் செல்லும் வரையிலும் நூற்றுக்கணக்கான மோட்டார் வாகனங்களையும் வேறு வகையான வாகனங்களையும் சூரப் புலி பார்த்தது. பரபரப்புடனே மக்கள் வெவ்வேறு திசைகளில் நடத்தும் வாகனங்களிலேறியும் சென்றுகொண்டிருந்தார்கள். மிக உயரமான கட்டடங்கள் வீதியின் இரண்டு பக்கங்களிலும் காட்சி அளித்தன. நாகரிகமான புதிய புதிய வகைகளில் கட்டப்பட்ட மாளிகைகள் எங்குப் பார்த்தாலும் தென்பட்டன. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே சூரப்புலி மடத்தை அடைந்தது. அன்று மாலே துறவி சூரப்புலியை அழைத்துக்கொண்டு கடற் கரைக்குச் சென்ருர், பரந்த கடலையும் அதில் ஓயாமல் எழுந்து கரையை நோக்கி வரும் அலைகளேயும் பார்த்துச் சூரப்புலி பிரமித்தது. துறவி முழங்கால் அளவு தண்ணீருக்குள்ளே நின்றுகொண்டு நீர்ப் பரப்பையே சற்று நேரம் கவனித்துக்கொண்டிருந்தார். எல்லே யில்லாமல் பரந்து கிடக்கும் கடல் அவருக்குக் கடவுளின் நினைவை உண்டாக்கியிருக்கும். அந்த நிலையிலேயே மெய்ம்மறந்து தியானம் செய்தார். பிறகு சூரப்புலியைக் கடல் அல்களோடு விளையாடு வதற்காக அழைத்தார். சூரப்புலியும் மகிழ்ச்சியோடு தண்ணிரில் இறங்கி அவரைச் சுற்றிச் சுற்றி ஒடியாடிக் களித்தது. பிறகு, சூரப் புலி மடத்திற்குத் துறவியுடன் திரும்பிற்று. அன்றிரவு சூரப்புலி கால்போன போக்கிலே வீதி வழியாகவும் சந்து வழியாகவும் நடந்தது. ஒரு குறுகிய வீதியிலே இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த கட்டடங்கள் நின்றுகொண்டிருந்தன. கட்டடங் களோடு சேர்ந்தாற்போலக் குறுகிய நடைபாதைகளும் இருந்தன. ஆல்ை அந்தப் பாதைகளிலே யாரும் நடக்க முடியாது. எனென்ருல், அங்கே சில குடும்பங்கள் தமது சட்டிபானை, மூட்டை முடிச்சுகளுடன் நிரந்தரமாகக் குடியிருந்தன. குழந்தை குட்டி சொத்து சுகம் எல்லாம் அந்த இடத்தில்தான். சூரப்புலி அந்தப் பக்கத்திற்கு வந்தபோது சிறு தூறல் விழத் தொடங்கிவிட்டது. அந்தக் குடும்பங்கள் எல்லாம் நனைந்துகொண்டே குந்தியிருந்தன. நாள் முழு வதும் பாரவண்டி இழுத்த களேப்பாலும், கூடை சுமந்த களைப்பாலும் சில ஆண்களும் பெண்களும் மழையைக்கூடக் கவனியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நோயால் வாடும் குழந்தைகள் ஒபாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/78&oldid=840644" இலிருந்து மீள்விக்கப்பட்டது