பக்கம்:சூரப்புலி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிக்கத் தொடங்கியது. திருடன் பையைக் கீழே நழுவ விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதவனைப்போல் பாசாங்கு செய்தான். "யார் இந்தக் கடிநாயைக் கடை வீதியிலே கொண்டுவந்தது?? என்று அதட்டுகிற குரலில் அவன் கேட்டான். இதற்குள்ளே பெரிய கூட்டம் கூடிவிட்டது. துறவி சிரித்துக்கொண்டே தரையில் கிடக்கும் பணப்பையைக் கையில் எடுத்து, அப்பா! இந்தப் பை வேண்டுமானுல் எடுத்துக்கொண்டு போ! நாயின் மீது குற்றம் சொல்லாதே’ என்று கூறிக்கொண்டே அவனிடம் நீட்டினர். போலீஸ்காரன் ஒருவன் இதற்குள் வந்து சேர்ந்தான். சூரப்புலியைத் தட்டிக்கொடுத்துவிட்டு அவன் ஜேப்படித் திருடனப் பிடித்துக்கொண்டு போய்விட்டான். துறவிக்கு எத்தனையோ பேர் பணம் கொடுக்க ஆவலோடு முன்வந்ததைச் சூரப்புலி பல தடவை கண்டிருக்கிறது. ஆனல் அவரிடமிருந்து திருடுகிற மனிதனைச் சென்னையிலேதான் அது பார்த்தது. துறவி ஒரு செருப்புக் கடைக்குள்ளே சென்று தமக்காகப் பாதம் முழுவதையும் மூடும் ஒரு புது மாதிரியான பாதரட்சை ஒரு ஜோடி வாங்கிக்கொண்டார். சூரப்புலியின் நான்கு பாதங்களுக்கும் அளவெடுத்து அவற்றிற்கு ஏற்றவாறு தோலால் பாதரட்சைகள் செய்யுமாறு ஏற்பாடு செய்தார். அடுத்த நாள் காலேயிலே சூரப்புலிக்கான பாதரட்சைகளே அதன் கால்களில் மாட்டிக் கட்டிய போது சூரப்புலிக்கு உண்டான ஆச்சரியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/80&oldid=840647" இலிருந்து மீள்விக்கப்பட்டது