பக்கம்:சூரப்புலி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 கூட்டங்களாகச் செல்வார்கள், பனிப் பிரதேசத்துக்குச் சென்றதும் எல்லோரும் ஒருங்கு சேர்ந்து கூட்டமாகச் செல்லுவார்கள், அங்கே திருடர் பயம் உண்டு, வீடுகளோ ஊர்களோ எங்கும் இல்லே, ஒரே பனிப் பாலைவனமாக இருக்கும், இரவு நேரங்களில் கூடாரமடித்துத் தான் தங்க வேண்டும். காற்றும், புயலும், பனிக்கட்டி மழையும் பயங்கரமாக இருக்கும், கூட்டமாகச் சென்ருல்தான் இவற்றை பெல்லாம் சமாளிக்க முடியும் . ஆல்ை நமது துறவி தனியாகவே சென்ருர். சூரப்புலி அவர்கூட நடந்தது. இராமகிருஷ்ண மடத் தாரின் விருப்பப்படி குதிரை ஒன்று துறவியின் சாமான் மூட்டையைத் தூக்கிக்கொண்டு சென்றது. குதிரைக்காரன் அதைப் பிடித்து நடத்திச் சென்ருன். 'கயிலாசபதிக்கு ஜேய் என்று துறவி கோஷ மிட்டுப் புறப்பட்டார். துறவி புறப்படுகிற சமயத்தில் சிலர் யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். இவ்வளவு காலம் தாழ்த்துப் புறப்படுவதால் திரும்புவதற்குள் கபிலாயத்தில் பணி பெய்வது அதிகமாகிவிடுமே என்று இராமகிருஷ்ண மடத்துச் சாதுக்கள் கவலைப்பட்டார்கள். ஆல்ை, துறவி எவ்விதமான கவலேயும் கொண்டதாகத் தெரியவில்லே. உள்ளத்தில் எப்பொழுதும்பொங்கிக் கொண்டிருக்கிற ஆனந்தம் இமயமலேயைச் சேர்ந்ததும் மிக அதிக மாகப் பெருகிக் கரை புரண்டு ஓடுவதுபோல் அவருக்குத்தோன்றிற்று. உலகத்தைப் பற்றிய நினவே அவரிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. வழியிலே உள்ள செங்குத்தான ஏற்றங்களிலும் இறக்கங்களிலும் வழுக்கல் நிறைந்த இடங்களிலும் பனிப்பிரதேசங்களிலும் ஊன்றி நடக்க அவர் கூரான இரும்புப் பூண்போட்ட ஊன்றுகோல் ஒன்றை வாங்கிக்கொண்டார். தலையிலே நீண்ட சால்வையை நன்ருகச் சுற்றி வரித்துகொண்டார். இராமகிருஷ்ண மடத்தார் அன்போடு வாங்கிக் கொடுத்த முக்கியமான உணவுப்பொருள்களேயும் மருந்து வகை களேயும் மூட்டையாகக் கட்டித் தோளிலே மாட்டிக்கொண்டார். 'ஜேய் கயிலாசபதி, ஜேய் கயிலாசபதி, என்று கூவிக்கொண்டு உற்சாகமாக நடக்கலானர். சூரப்புலி பக்கத்தில் நடந்தது. துறவியின் முகத்திலே தாண்டவமாடும் தெய்விக ஒளியைக் கண்டு வழியில் எதிர்ப்பட்டவர்கள் எல்லோரும் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினர்கள். சூரப்புலி வெகுநாள் பழகி அவருடைய பெருமையை அறிந்துகொண்டிருந்தது. ஆனல் பார்த்தவுடனேயே கு. பு-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/84&oldid=840651" இலிருந்து மீள்விக்கப்பட்டது