பக்கம்:சூரப்புலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இல்லாவிட்டாலும் சிறு சிறு குன்றுகளின்மேல் எறியும் இறங்கியும் கால்நடைப்பாதை சென்றுகொண்டிருந்தது. பல ஓடைகளேயும் வழியிலே கடக்க வேண்டும். அந்த ஓடைகள் எல்லாம் கீழே வெகு தூரத்தில் ஒடிக்கொண்டிருக்கும் காளிகங்கையில் போய்ச் சேருகின்றன. அவற்றைக் கடக்க மரப்பாலங்களும், ஊஞ்சல் பாலங்களும் சில இடங்களிலே இருக்கின்றன. சிலவற்றைத் தண்ணி ருக்குள் இறங்கியே கடக்க வேண்டும். பனி உருகுவதால் வருகின்ற தண்ணீராகையால் தொட்டால் ஜில்லென்று கை மரத்துப்போகும்படி இருக்கும். அவற்றையெல்லாம் கடப்பதிலே துறவிக்கு ஒரே உற்சாகமாக இருந்தது. விளையாட்டுப்போல அவற்றைக் கடந்து துறவி நடந்தார். சூரப்புலி துள்ளிக் குதித்துக்கொண்டு பக்கத் திலேயே சென்றது. நாலு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்து விளங்கும் மலேகளும் அவற்றிற்கிடையே உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளுமாக அப்பகுதி காட்சியளித்தது. சில பகுதி களிலே தேவதாரு மரங்கள் உயர்ந்து வளர்ந்து அழகாகத் தோன்றின. உயர்ந்த மல்ேகளுக்குப் பின்னல் எல்லே கடந்த இமய மலேயிலே ஆகாயத்தை முட்டும்படி நிற்கும் பனிச்சிகரங்கள் இந்தப் பகுதியில் கண்ணுக்குத் தென்படவில்லே. மனிதனேயோ வேறு விலங்குகளையோ அந்தச் சமயத்தில் காண முடியவில்லை. குன்று களிடையே அறுத்துக்கொண்டு கற்களையும் மரங்களேயும் அடித்துக் கொண்டு வேகமாக ஓடும் ஓடைகளின் எதிரொலிதான் எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு பகுதியிலே இரண்டு சிறிய குன்றுகளுக்கிடையே ஒடுகின்ற ஒரு பெரிய ஓடை குறுக்கிட்டது. அந்த ஒடையிலே எப்பொழுதும் தண்ணீர் இராது. தண்ணீர் ஓடிலுைம் ஆழம் அதிகமிராது. ஆனல் துறவி அதை அணுகும்போது அதில் வெள்ளம் கொந்தளித்துக் கொண்டு கரைபுரண்டு ஓடிற்று. இமயமலையிலே எதாவதொரு பகுதியிலே திடீரென்று மேகம் கூடி இடியோடும் மின்னலோடும் மழை பெய்யும். இடியோசை மலேச்சாரல்களிலே எதிரொலித்து நிலப்பகுதியே நடுங்கும்படியாக இருக்கும். ஊழிக்காலமே வந்துவிட்டதுபோல் தோன்றும். அவ்வாறு இடியிடித்து மழை பெய்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மேகக் கூட்டங்கள் மறைந்துபோகும். அவ்வாறு பெய்த மழையால்தான் இப்பொழுது அந்த ஓடையில் வெள்ளம் பெருகிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதைக் கடப்பதற்கு அருகிலே பாலம் எதுவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/96&oldid=840664" இலிருந்து மீள்விக்கப்பட்டது