பக்கம்:சூரப்புலி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டார்ச்சுலாவிலிருந்து மறுநாள் அதிகாலேயிலேயே துறவி புறப் அட்டார். கடுமையான எற்றங்களேயெல்லாம் இனிக் கடந்தாக வேண் டும். மூச்சுத் திணறும்படியான செங்குத்துப் பாதை இருந்தது, அதையடுத்து ஒரே இறக்கம். ஏற்றத்திலே எறித் தளர்ந்துபோனதில் கால்களுக்கு இறக்கத்திலும் பெரிய சோதனை ஏற்படும். அப் பொழுதெல்லாம் கால்களைவிடக் கையிலுள்ள ஊன்றுகோல்தான் அதிகமாகப் பயன்படும். இவ்வாறு சிரமப்பட்டுச் சென்று கேலா, சிர்க்கா, ஜிப்தி முதலிய ஊர்களைக் கடக்க மூன்று நாட்கள் ஆயின. வழியின் பல பாகங்களிலே ஆழத்திலே ஒடும் காளிகங்கை காட்சி யளித்தது. ஜிப்தியிலிருந்து துறவி புறப்பட்டவுடன் மழை தூற ஆரம்பித்து விட்டது. அதைப் பொருட்படுத்தாமல் துறவி நடந்தார், தூரத் திலே மலே உச்சியிலே கருமேகங்கள் திரண்டு மழை கொட்டுவது போலத் தோன்றியது. நிர்ப்பானி மலேயின் சிகரங்கள் இடது பக்கத் திலே செங்குத்தாக வானத்தைத் தழுவுவன போல நின்றன ; கால் நடைப்பாதை அந்த மலேயின் நடுப்பகுதியிலே சென்றது. கீழே மூவாயிரம் அடிக்கு ஒரே இறக்கம். இறக்கத்தின் கீழே காளிகங்கை பாதாளத்தில் ஒடுவதுபோல உக்கிரமாக ஓடிக்கொண்டிருந்தது.மேலே தலையை நிமிர்ந்து பார்த்தாலும் உச்சி கண்ணுக்குத் தெரியாத செங் குத்தானமல். கீழே ஒரே கிடுகிடு பாதாளம். இவற்றினிடையே துறவி உயரமான ஏற்றத்திலும் இறக்கத்திலுமாக அடிமேல் அடி வைத்துச் சென்றுகொண்டிருந்தார். தூறல் பெருமழையாகப் பிடித்துக்கொண் டது. ஓர் இடத்திலே செல்லும்போது முன்னல் சென்ற சூரப்புலி சட்டென்று திரும்பி ஓடி வந்தது. துறவியின் நீண்ட அங்கியைப் பிடித்து வேகமாகப் பின்னுக்கு இழுத்தது. பாதையிலே திரும்பி ஒட வேண்டுமென்பது அதன் எண்ணம். துறவி அதைப் புரிந்து கொண்டார். அதன் விருப்பப்படியே ஒடலானர். சூரப்புலியும் பின்னலேயே ஓடி வந்தது. இவ்வாறு முந்நூறு கஜத்திற்கு ஓடியிருப்பார்கள். அங்கே மலேயின் மேல்பகுதி முன்னுல் நீட்டிக்கொண்டு ஒரு குடைபோல அமைந்திருந்தது. பாதையின் அருகிலே குகைபோலவும் தோன்றி யது. சூரப்புலி அதற்குள்ளே புகுந்தது. துறவியும் பின்னலேயே சென்ருர். பூமியே அதிரும்படியாக அந்தச் சமயத்திலே ஓசை கேட்டது. பெரிய பெரிய பாறைகள் தடால் தடால் என்று மோதிக் கொண்டு விழுந்து உருண்டன. குகைக்குள்ளிருந்து துறவி எட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/99&oldid=840667" இலிருந்து மீள்விக்கப்பட்டது