பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(2) தேகப்பயிற்சி தேவையாயுள்ள அங்கங்கள். சரீரத்தின் நான்கு முக்கிய இந்திரியங்கள் தங்கள் தங்கள் காரியங்களைச்சரிவர நடத்தினாலொழிய மனிதன் ஆரோக்கியமாயிருக்க மாட்டான்; ஆகையால் அவைகளை அபிவிருத்தி செய்து பலமடையும்படிச் செய்யப் பிரயத்தனப்படவேண்டும். சூரிய நமஸ்காரங்களைக் கிரமமாகவும், சாஸ்திரீகமாகவும் செய்தால் இந்த நான்கு இந்திரியங் களும் நன்றாகப்பருத்து வியாதிகளுக்கும், அல்லது வியாதிகளுக்குக் காரணமான கிருமிகளுக்கும் இடங்கொடாமல் நம்மைக் காப்பாற்றும் என்பதை, நாங்கள் சொந்த அனுபவத்தினால் அறிந்திருக்கிறோம். இந்த நான்கு அங்கங்கள் எவையென்றால் :

   (1) ஜீர்ணத்தைச் செய்யும் அங்கங்கள் :- 

இரைப்பை (Stomach) யும், குடல் (intestines) களும் தத்தம் காரியங்களைச் சரி யாகச் செய்யாமையால் அநேகர் அஜீர்ணத்தினாலும், மலச்சிக்கலினா லும் துன்பப்பட நேரிடுகின்றது. இவைகளினால் ஈரல்நோய், மகோதரம், மூலவியாதி (Piles) நீர்வியாதி (Diabetes ) முதலியவை சம்பவிக்கின்றன.

   (2)     இருதயமும், ஸ்வாச கோசங்களும்:-   (Heart and the Lungs). இவைகள் 

துர்பலமாகின்றபடியால் சளி, இருமல், ஆஸ்த்மா , க்ஷயம் முதலான வியாதிகள் ஏற்படுகின்றன.