பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாக்கின் உபயோகம். சூரிய நமஸ்காரத்தின் முக்கியமான மந்திரங்கள் எவை என்றால்: -

   (1)   ஓம்:- இது ஓங்காரம் அல்லது பிரணவம் என்று சொல் லப்படும். 

(ஓம்: ஓங்காரம் அல்லது பிரணவம்.) (2) ஆறு பீஜ மந்திரங்கள் எவை என்றால் :- ஹ்ராம், ஹ்ரீம் ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹாஹ. (3) சூரியனைத் தோத்திரஞ் செய்யுங்கால் சொல்லவேண்டிய அவனுடைய பன்னிரண்டு பெயர்கள் எவை என்றால் : - மித்ராய நமஹ. ரவயே நமஹ. சூர்யாய நமஹ, பானவே தமஹ, க்காய நமஹ. பூஷ்ணே நமஹ. ஹிரண்ய கர்பாய நமஹ. மரீசயே நமஹ ஆதித்யாய நமஹ. சவித்ரயே நமஹ. அர்க்காய நமஹ. பாஸ்கராய நமஹ. நம்முடைய முன்னோர்கள் இந்த மந்திரங்களைச் சாஸ்திரீகமாய்க் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளை மேல் கண்டபடி எவ்வளவு தரம் சொன்னாலும் சிரமம் உண்டாகுவ தில்லை. ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ முதற்கொண்டு ஓம் ஹ்ரஹ பாஸ்காராய நமஹ வரையில் முதல் பன்னிரண்டு நமஸ்காரங்களைக் கொஞ்சம் வேகமாகச் செய்யலாம். மேல் ஆறு நமஸ்காரங்களை (அதாவது ஓம் ஹ்ராம் ஹரீம் மித்ர ரவிப்யா நமஹ வரையில்) செய்வதற்குக் கொஞ்சம், நேரம் அதிகம் வேண்டும். மேல் மூன்று நமஸ்காரங்களுக்கு (ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், மித்ர ரவி சூர்ய பானுப்யோ நமஹ இவைகளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக் கும். கடை மூன்று நமஸ்காரங்களுக்கு (ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ரஹ ; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ரஹ, மித்ர ரவி சூர்ய பானுக்க பூஷ ஹிரண்ய கர்ப மரீசி ஆதித்ய சவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நமஹ) இவைகளுக்கு மிகுந்த நேரம் பிடிக்கும். இவைகளெல்லாம் சேர்ந்து 24 நமஸ்காரங்கள் ஆகும். இத்துடன் ஸ்ரீ சூர்ய நாராயணாய நமஹ என்பது சேர்ந்து 25 நமஸ்காரங்களாகும். இவை ஒரு சுற்று ஆகும். இதனால் சிறிதும் ஆயாஸம் ஏற்படாது. இதைப்போலவே இரண்டாம் சுற்றைச் செய்யும்பொழுதும் சரீரமானது சிறிதும் பலங்குன்றாமல் சுகமான தாய் இருக்கும். சிரமத்தினாலும், தூக்கத்தினாலும் ஏற் பட்ட ஜடத்வமானது முதல் சுற்றினால் நீங்குவது இந்த புதிய தன்மைக்குக் காரணமாகும். இம்மாதிரி 12 அல்லது 16 சுற்றுக்கள் (12/25 or 16x20) அதாவது 300 அல்லது 400 நமஸ்காரங்