பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிரயோஜனம் ஏற்படும்"- 1926– ஆகஸ்டு மாதத்து "பிசிகல் கல்சர்'". (4) டாச்டர். எஸ். எச். பெல்பிரேஜ், எம்.டி. (Dr. S. H. Belfrage, M. D.) என்பவர். "எது சிரேஷ்டமான உணவு என்னும் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருப்பது என்னவென்றால்: பிராணிவர்க்கத்திலெல்லாம் பரவியிருக்கும் மின்சாரசக்தியானது வெளிச்சம், உஷ்ணம் முதலிய ரூபமாய் சூரியனிடமிருந்து பெற்றிருக்கிறது. சூரியன் கொடுக்கும்படியான இச்சக்தியினால் பூமியின் கண் உள்ள அசேதனப் பொருள்களுக்குப் போதுமான அளவு சைதன்யம் ஏற்பட்டு அவை சேதனப்பொருள்களாக மாறுகின்றன. ஆகையால் பயிர்களின் மேல் வெயில் விழுந்தவுடன் அவை சுவாசவாயு (Oxygen) ஜலவாயு (Hydrogen) தர்க்கியசம் (Nitrogen) முதலியவைகளையும்; இரும்பு, நிபாக்னி (Phosphorous) முதலிய அசேதனப் பொருள்களையும் இழுத்துக்கொண்டு கலப்புத்திர வியங்களாக மாறி அவற்றால் பிராணிகளின் சரீரவளர்ப்புக்கு உபயோகம் ஏற்படுகின்றது. இம்மாதிரியான சக்தியெல்லாம் பயிர்களில் மிகுதியாகச் சேர்ந்து உணவு ரூபமாகப்பிராணிகளின் சரீரத்தில் போய்ச் சேரும். ஆகையால் நாம் ஒவ்வொரு நிமிஷமும் செலவழிக்கும் படியான சக்தியைச் சூரிய தேவனே எப்பொழுதும் அளித்துவர வேண்டிய தாயிருக்கிறது" (5) தி மாஸ்டர் கீ சிஸ்டம்' (The Master Key System தி நியூசைகாலஜீ" (The New psychology) முதவிய புத்தகங்களை எழுதியிருக்கிற சார்லஸ் எப். ஹார்னல் (Charles F. Harnel) கூறி யிருப்பது என்னவென்றால்:- இப்பூமியில் (சேதனம் அல்லது அசேதனம்) முதலிய எல்லாப்பொருள்களிலுமுள்ள சக்தியானது பிரத்யட்சமாகவே சூர்யனால் கொடுக்கப்படுகிறது. ஓடும் நீர், வீசும் காற்று சஞ்சரிக்கும் மேகங்கள், இடிக்கும் இடி, தோன்றும் மின்னல், பொய்யும் மழை, பனி செடிகள் முதலிய வைகளின் அபிவிருத்தி, பிராணிகள், மனிதர்கள் முதலியவருடைய உஷ்ணம், அசைவு, விறகு, கரி இவைகள் எரிவது முதலிய இவைகளெல்லாம் ஸ்புடமான சூர்பசக்தி யல்லாமல் வேறு என்ன? (Cheapness) மலிவு அல்லது நயம் சில குறும்பாளிகள், சூர்ய நமஸ்காரங்களால் ஒரு! செலவும் உண்டாகாதபடியால் அவைகள் புகழப்படுகின்றன என்று சொல்லு கிறார்கள். ஆனால் அதில் தோஷமென்ன இருக்கின்றது. அப்படி