பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யிருப்பதனால் அது ஒவ்வொரு வருக்கும் சாத்தியமாயிருக்க வில்லை யா? சுலபமாயிருப்பதன்றி வேறு சில நற்குணங்களும் இருக்கின்ற படியால் எல்லா தேகப்பபிற்சியைக் காட்டிலும் சூர்ய நமஸ் காரங்கள் சிரேஷ்டமானவைகளாகக் கருதப்படுகின்றன. இவைகளால் தசை நார்கள் மாத்திரமன்றி எல்லா நரம்புப் பிரதேசங்களும் அபிவிர்த்தியடைந்து உள்ளிருக்கும் எல்லா இந்திரியங்களும் தங்கள் தங்கள் வேலைகளைச் சரிவர நிறைவேற்றும்படிச் செய்கின்றன. இவை களால் முகத்திற்குத் தேஜசும் அங்கங்களுக்குக் காந்தியும் ஏற்படு கின்றன. பேஜாராகச் செய்வது (Monotonousness) சிலர் இந்த அப்பியாசத்தினால் உல்லாசம் ஏற்படுகிறதில்லை யென்றும் அருவருப்புத் தோன்றுகிறதென்றுங் கூறுகிறார்கள். நம்முடைய முறைப்பிரகாரம் நமஸ்காரங்களைச் செய்வதற்கு 25- அல்லது 30-நிமிஷங்கள் மாத்திரம் தான் ஆகின்றன. இவ்வப்பியாசத்தினால் சரீரத்தின் எல்லா அங்கங்களும் வேகமாக அசைந்து மனதும் சித்தமும் நானா ஆசனங்களின் மேல் கவனத்தைச் செலுத்தவேண்டியதா யிருக்கின்றன. ஆகையால் ஒவ்வொரு காரியமும் இனியதாயிருக்கின்றதே யொழிய அருவருப்பா யிருக்கிறதில்லை. 1927m அக்டோபர் மாதத்து "பிசிகல் கல்சர் என்னும் பத்திரிகையில் பி . மக்பாடன் (B. Macfadan) என்பவர் எழுதி யிரு ப்பதென்ன வெனில்: 'தேகாப்பியாச சாஸ்திர நிபுணரான வில்லியம் மூலடன் (William Muldon) என்பவர் மிக்க பலத்தை எப்படியடைய முடியு மென்பதை அநேக தடவைகளில் பரிசீலனைச் செய்திருக்கிறார். அது சில மனோலட்சணங்களுக்கு ஆதீனமாயுள்ளதென்றும், சரீரசக்திக்கு, மனோதிடம் அவசியமென்றும், அவர் காண்பித்திருக்கிறார். இது உண்மை யல்லவென்று யாரும் சொல்ல முடியாது. மனோ சக்தியின் மகத்வத்தை விவேகிகள் கிரகிக்காமலிருக்க மாட்டார்கள். இச்சக்தியானது நமக்குச் சிரேஷ்டமான சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வாழ்நாட்களில் செய்யவேண்டிய உத்தேசங்களை முடிப்பான் தக்க மன உறுதியை யுண்டாக்குகிறது. "ஒவ்வொருவரும் கூடுமானவரைக்கும் சரீரத்தையும் மனதையும் பலப்படுத்திச் சகஜ மாயிருக்க வேண்டிய சக்திகளெல்லாம் நிலைநிற்குமாறு செய்பவேண்டும். அங்கிருந்து சரீரமாவது மனதாவது உறுதித்தன்மையை வெளியே விடாமலிருக்கும்படிக் காப்பாற்றிக்கொண்டு வர வேண்டும்,