(13) பல், பல்லின் பசை, (Gum) நாக்கு இவைகளை நிர்மலமாக வைத்துக் கொள்ள வேண்டும். (4) சுறுசுறுப்பு,
(14) வேலை, ஆட்டம், சிரமபரிகாரம், தூக்கம் இவைகளில் மிதமாயிருக்கவேண்டும்.
(15) எப்பொழுதும் சாந்த சித்தத்துடன் இருக்க வேண்டும். "இயற்கையாகவும், கஷ்டமின்றி எளிதாகவும் இருக்க வேண்டுமென்ற உத்தேசத்தினால் தான் மேற்கண்ட நியமங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவதனால்: (1) க்ஷணதசையும், மரணங்களும் நீங்குகின்றன. (2) மனிதர்களும் மதமும் க்ஷணிக்காமல் பார்த்துக்கொள்ளப் படும். (3) வியாதிகள் வராமலிருக்கும். எங்களுடைய சூர்ய நமஸ்காரங்கள் எவ்வளவு எளிதானவை யாயும் இயற்கை யானவையாயும் இருக்கின்றன என்பதை மேற்கூறியுள்ளவற்றால் அறியலாம். இந்நமஸ்காரங்களைச் செய்யுங்கால் ஆகாரத்தைக் கிரமப்படுத்திக்கொண்டால் மேற்கண்ட மூன்று பலன்கள் ஏற்படுவதில் சிறிதும் சந்தேகமில்லை. முடிவில் இதைப்படிக்கும் வாசகர்களாகிய - ஸ்திரீகளும் புருஷர்களும், கிழவரும் குமரரும், பல முள்ளவரும் பலஹீனரும் - பின்னே விவரித்திருக்குமாறு ஒரே சமமாய் சூர்ய நமஸ்காரங்களையும், ஆகாரநியமத்தையும் சரியாக அனுசரித்து வந்தால் தங்களுக்கு மாத்திரமேயன்றி தங்களைச் சேர்ந்துள்ளாருக்கும் ஆயுராரோக்கிய ஜசுவரியங்கள் ஏற்படுமாறு திடப்படுத்திக் கொள்ளுவதில் யாதொரு சந்தேகமும் இருக்காது.
Kesari Printing Works, G. T., Madras