பக்கம்:சூளுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இடமே அழியாநிலை. தி.மு. கழகத்திற்கு என்றென்றும் அழியா நிலை. அதற்கு அடையாளமாகத்தான் இன்று காலையிலே செயற்குழு அந்த ஊரில் நடைபெற்றது. 100 GT GST GST, ஆயிரம் 100 என்ன, அந்தச் செயற்குழுவில் நாம் நிறைவேற்றிய தீர்மானங் களை முன் மொழிந்த நாவலரும், தீர்மானங்களை வழிமொழிந் தவர்களும் எடுத்துக் காட்டினார்கள். காலையில் பேசியவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல, நமது நாடாளுமன்ற கட்சித் தலைவர் நண்பர் செழியன் அவர்கள் இன்றைக்கு இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிற பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிற 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற படம் என்று விளம்பரப்படுத்தப்படும் பட்டுக் கொண்டிருக்கிற நெருக்கடி நிலைமையைப் பற்றி மிக விளக்கமாக எடுத்துப் பேசினார்கள். 100 நாட்கள் சாதனைகள் என்றெல்லாம் விளம்பரம் செய்து வருகிறார்கள். எல்லாம், சாதனைகள் பத்தாயிரம் என்ன, லட்சம், கோடி என்ன. எவ்வளவு சாதனைகள் புரிந்தாலும், இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிற கோடானு கோடி மக்களுக்கு அவர்களுடைய முகத்திலே மகிழ்ச்சி பொங்க, கண்ணிலே புத்தொளி ஏற்பட இன்னும் நீண்ட காலம் ஆகும் என்பதை நாம் புரிந்து தான் வந்திருக்கிறோம். அந்தப் பெருமகிழ்ச்சியால் நாம் சாதனைகளே செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. அவசரச்சட்டம் தி. மு. கழகத்தால் ஏற்கனவே சென்னையில் விமசரிக்கப்பட்டு இருக்கிறது செயற்குழுவில். அதற்குப் பிறகு நெல்லையிலே அதுபற்றி பேசப்பட்டிருக்கிறது. தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. சேலத்தில் அதுபற்றி விளக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைத் தணிக்கை என்ற பெயரால் நம்முடைய மாநில சுயாட்சி என்ற கொள்கை தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஒரு வேளை அந்த தீர்மானம் கூட. பத்திரிகைகளில் வராமால் போகலாம். நான் எதிர்பார்க் கிறேன், வராது, தீர்மானம் ஒன்றும் பயங்கரமானது அல்ல. நம்முடைய உரிமைக் குரல், எங்களுடைய கழகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/118&oldid=1695895" இலிருந்து மீள்விக்கப்பட்டது