பக்கம்:சூளுரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 115 கொள்கை, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, அண்ணாவின் கொள்கையை வடித்தெடுத்து, அதற்கு உருவம் கொடுத்து திருச்சி மாநாட்டில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி' என்ற ஐம்பெரும் முழக்கங் களை அண்ணன் வகுத்த அந்த அருமையான கொள்கையை நாம் எழிலோடும் எழுச்சி வடிவம் கொடுத்து முழக்கினோம். அதுவே கழகச் சட்டதிட்டப் புத்தகத்தில் ஏறியிருக்கிறது. அந்தக் கொள்கைகளைத்தான் 1967லும் சரி, 1971லும் சரி நாங்கள் தேர்தல் பிரகடனமாக தமிழக மக்களின் முன்னால் வைத்து உள்ளோம். ஆனால் அந்தக் கொள்கை நம்முடைய கழகச் சட்ட திட்டத்தில் ஏறியிருக்கிற கொள்கை, இன்றைக்குத் தமிழ்நாட்டில் நம்முடைய கழக ஏடுகளில், கழகச் சார்புடைய ஏடுகளில் வெளிவரக் கூடாது என்று தடுக்கப்படுகிறதென்றால், அது தவறு, அதைக் கண்டிக் கிறோம் திருத்திக் கொள்ளுங்கள் உடனடியாக உங்கள் நிலையை, மாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் காலையில் செயற்குழு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஒன்று அந்தத் தீர்மானத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு அந்தத் தீர்மானம் போய்ச்சேரும். நாளைக்கே, தமிழ்நாட்டில் இருக்கிற தணிக்கை அதிகாரிக்கு மத்திய அரசு ஒரு தாக்கீதை அனுப்பி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலையாய கொள்கை மாநில சுயாட்சி. அதை அவர்கள் கேட்க, சொல்ல அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆகவே தடுக்கக்கூடாது என்ற ஒரு தாக்கீதை இங்கே இருக்கிற தணிக்கை அதிகாரிக்கு மத்திய அரசு அனுப்பும் என்று நான் நம்புகிறேன். ஒன்று அப்படி அனுப்பவேண்டும் இல்லாவிட்டால் தி. மு. க. தலைவருக்கு அல்லது பொதுச் செயலாளருக்கு, மாநில சுயாட்சி என்ற வார்த்தை தடை செய்யப் பட்டிருக்கிறது, அதை நீங்கள் சொல்லக்கூடாது என்று தடையுத்தரவையாவது அவர்கள் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/119&oldid=1695896" இலிருந்து மீள்விக்கப்பட்டது