பக்கம்:சூளுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இந்தப் பொது அறக் கட்டளைகளில்-கல்லூரி என்றால் நாற்பது ஸ்டாண்டர்டு ஏக்கர்; உயர்நிலைப் பள்ளி என்றால் 20 ஸ்டாண்டர்டு ஏக்கர்; ஆரம்பப் பள்ளி என்றால் 10 ஸ்டாண்டர்டு ஏக்கர்; மாணவர் விடுதி என்றால் 25 ஸ்டாண் டர்டு ஏக்கர்; தொழிற் கல்விக்கூடங்கள் என்றால் 25 ஸ்டாண்டர்டு ஏக்கர்; விவசாயப் பள்ளிகளுக்கு 25 ஸ்டாண் டர்டு ஏக்கர்; மற்ற அறக் கட்டளைகளுக்கு ஐந்து ஸ்டாண் டர்டு ஏக்கர் என்றும், அதற்குமேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் வரம்பு நிர்ணயித்திருக்கிறோம். குத்தகை உரிமைப் பதிவேட்டுச் சட்டம் அடுத்து குத்தகைதாரர்-சாகுபடிதாரர்; 'இதற்கெல் லாம் ஆவணங்க வேண்டும் - பதிவு முறை வேண்டும். என்று தலைமையமைச்சர் அறிவித்திருக்கிறார். நாங்கள் அதையும் செய்திருக்கிறோம்; அறிவித்த பிறகு அல்ல - 1969-லேயே தமிழ்நாடு வேளாண்மை நிலக் குத்தகை உரிமைகள் பதிவேட்டுச் சட்டத்தை நாம் நிறைவேற்றி யிருக்கிறோம். இதுவரையில் பதிவு செய்யப்பட்ட குத்தகைதாரர்களின் எண்ணிக்கை 3,99,350 என்று கணக்கெடுத்திருக்கிறோம்; அவர்களின் அனுபோகத்தில் உள்ள நிலம் 6,03,89 ஏக்கர் என்றும் கணக்கை இதுவரை முடித்திருக்கிறோம். பட்டா விவரக் குறிப்பேடுகள் - அஃதன்னியில், நில உடைமையாளர் வைத்திருக்கின்ற நிலத்திற்கான கணக்கு விவரங்களைத் தெரிந்துகொள் வதற்கான கணக்கு விவரங்களைத் தெரிந்து கொள்வ தற்காக - நிலச் சீர்திருத்தங்களுக்கு மேலும் பயன்படும் என்ற வகையில், 'பட்டா விவரக் குறிப்பேடு என்ற ஒன்றை ஒவ்வொரு விவசாயியும் வைத்துக்கொள்ள வேண்டும்' என்று 1972-இல் ஒரு திட்டம் கொண்டுவந்தோம்! இதுவரை கொடுக்கப்பட்ட அப்படிப்பட்ட பட்டா விவரக் குறிப்பேடு 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/141&oldid=1695918" இலிருந்து மீள்விக்கப்பட்டது