பக்கம்:சூளுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை 24 மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்-தொழிற் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் - அரசுத் தரப்பினர் ஆகியோரின் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டி, ஒரு சுமுகமான முடிவினை எடுத்திருக் கிறோம். ஒரு குழுவை இப்போது மீண்டும் இந்த அவசரச் சட்டத்திற்குப் பிறகு - அம்மையார் அவர்கள் அறிவித்திருக்கின்ற இருபது அம்சத் திட்டத்திற்குப் பிறகு-மீண்டும் இன்றைக்கும் நாம் அமைத்து. அந்தக் குழு, நண்பர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் தன்னுடைய ஆய்வை நடத்தி வருகிறது; அக் குழு, பல்வேறு மாவட்டங்களிலும் இந்த ஆய்வை நடத்தும் இதற்கிடையே, 'ஆண்-பெண் ஆகிய இரு சாராருடைய சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்' என்கின்ற அறிவிப் பையும் மத்திய அரசின் சார்பில் செய்திருக்கிறார்கள். அதையும் அடிப்படையாக வைத்து, 'வேலை செய்கின்ற வர்கள் ஆணா -பெண்ணா' என்றுகூட இல்லாமல், 'இந்த வேலைக்கு இந்தக் கூலி-அதை ஆண் செய்தாலும் சரி- பெண் செய்தாலும் சரி' என்று நிர்ணயிக்கின்ற அளவிற்கு அந்த குழு தன்னுடைய ஆய்வை நடத்தி விரைவில் ஒரு முடிவினைத் தரும்; அது, அரசின் சார்பில் பரிசீலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாசன வசதிகளைப் பெருக்கினோம்! ஆவது அம்சமாக- "உழவுத் தொழிலையும், தொழில் உற்பத்தி யையும் பெருக்க நீரும், மின்சாரமும் இன்றியமை யாதன; குறைந்தது 50 இலட்சம் ஹெக்டர் நிலத்தையேனும் விரைவில் சாகுபடிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாகும். ஐம்பது இலட்சம் ஹெக்டர் என்றால், ஒன்றேகால் கோடி ஏக்கர்; இந்தியாவில் ஒன்றேகால் கோடி ஏக்கர் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/148&oldid=1695925" இலிருந்து மீள்விக்கப்பட்டது