பக்கம்:சூளுரை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 தமிழ்நாட்டில் அரிசனங்கள் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்காக உள்ள இல்லங்கள் 570; அதிலே படிக்கும் மாணவர்கள் 35, 782 பேர்; பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான இல்லங்கள் 231; அதிலே பயிலும் மாணவர்கள் 16, 332 பேர். இந்த இல்லங்களில் அவர்களுக்கு வேண்டிய இன்றியமை யாப்பொருள்கள் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் கட்டுப்பாட்டு விலையில்தான் வழங்கப்பட்டு வருகிறது; தொடர்ந்து பல ஆண்டுக்காலமாக இதனை நாம் செய்து வருகிறோம்; ஆகவே, இது ஒன்றும் நாம் நிறைவேற்ற மறுப்பதல்ல!. நியாய விலையில் பாட நூல்கள் பதினான்காவது அம்சமாக-

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நியாய விலை

யில் பாட நூல்கள், எழுது பொருள்கள் வழங்குதல்; விலைகளைக் சண்டிப்பாகக் கட்டுப்படுத்தப் படுதல்; புத்தக வங்கிகள் அமைத்தல்" என்பதாகும். வங்கிகள் கே.டி.கே. தங்கமணி அவர்கள்கூட, இந்தப் புத்தக அமைக்கப்பட்டு-புத்தகங்கள் வெளியிடுவது நாட்டுடைமையாக்கப்பட்டிருப்பதை மனந்திறந்து பாராட்டி அப்படிப் பாராட்டிவிட்டு, 'விலைகள் அதிகமாக குறைக்கப்பட வேண்டும். என்று சொன்னார்; நான் அதற்கு விளக்கம் தர விரும்புகிறேன். னார்; இருக்கின்றன —அது இந்த இருபது அம்சம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசு, 'மாணவர்களுக்குப் பாடப் புத் தகங்களைத் தனியார் துறையில் அல்லாமல் அரசுத் துறையிலேயே ஒரு நூல் வெளியீட்டகம் அமைத்து-அதன் மூலமாகப் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என்ற முறையை அமைத் திருக்கிறதா இல்லையா என்பதைத் தயவு செய்து மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/161&oldid=1695938" இலிருந்து மீள்விக்கப்பட்டது