பக்கம்:சூளுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 27 பூசலா மனத்தாங்கலாக இருந்தாலும் -மாவட்டத்துப் இருந்தாலும் -உள்ளூர் தகராறாக இருந்தாலும் -எந்தக். காரணமாக இருந்தாலும்- கொள்கை எங்கே இருக்கிறதோ அந்த இடத்திற்கு, மீண்டும் வருவார்கள் என்பதற்கு அடை யாளம் தான் (கைதட்டல்) நண்பர் மேத்தா அவர்கள் இந்த மாநாட்டிலே உங்களை எல்லாம் சந்தித்த காட்சி. நெல்லைச் சீமையிலே நாம் செய்த சாதனை நெல்லைச் சீமையின் பெருமை பற்றி நேற்றும், இன்றும் பேசிய நண்பர்கள் எல்லாம் புகழ்ந்தார்கள். இந்த நெல்லைச் சீமை ஈன்றெடுத்த தியாகிகளைப் பற்றி எல்லாம்- விடுதலை வீரர்களைப் பற்றி எல்லாம்-சொன்னார்கள். . "வானம் பொழியுது. பூமி விளையுது - மன்னவன் காணிக்கு கிஸ்தி ஏதுக்கடா' என்று கேட்ட கட்டப் பொம்மன் இந்த நெல்லைச் சீமையிலே தான் பிறந்தான் என்று புகழ்ந்தார்கள். அதே நேரத்தில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த- எட்டப்பனும் இந்த நெல்லைச் சீமையிலே தான் பிறந்தான் என்பதனை ஏனோ நெல்லை மாவட்டத்து நண்பர்கள் மறைத்து விட்டார்கள். (சிரிப்பு) நல்லது ஒன்று தோன்றுகிற நேரத்தில் அதோடு சேர்ந்துவ சில நேரங்களில் பொல்லாததும் தோன்றும். அந்த வகை யிலே தான் கட்டபொம்மன் பிறந்த இந்தச் சீமையில் எட்டப்பனும் பிறந்தான்; அவனைக் காட்டிக் கொடுத்தான். இந்தச் சீமையிலேதான் "எங்கும் சுதந்திரம் என்பதே.. பேச்சு" என்பதை பலரும் பாடிக்காட்டினார்களே, அந்தப் பாட்டு வேந்தன் சுப்ரமணிய பாரதியும் தோன்றினான். இந்தச் சீமையிலேதான் செக்கிழுத்த சிதம்பரனா தோன்றினார். இந்தச் சீமையிலேதான் வாஞ்சிநாதன் தோன்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/31&oldid=1695808" இலிருந்து மீள்விக்கப்பட்டது