பக்கம்:சூளுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இலட்சியத்தை ஒத்திவைத்தோம்-எதற்காக? தி. மு. கழகம், வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவிலே- எந்த நேரத்தில் ஆக்கிரமிப்பைச் செய்த நேரத்திலும், தன் னுடைய கொள்கையை -இலட்சியத்தை ஒத்திவைத்து விட்டு. இந்தியா வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான காரியங்கள் பலவற்றைச் செய்ததை நாவலர் இங்கே. குறிப்பிட்டார். ஆறு கோடி ரூபாய் பாதுகாப்பு நிதியாக-தமிழகத்தின் சார்பில் தந்தோம்; அந்த நேரத்தில்கூட, இங்கே இருக்கின்ற சிலர், 'இந்திரா காந்தியின் படத்தையும்-என் படத்தையும் ஒன்றாகச் சேர்த்துச் சுவரொட்டி போடலாமா' என்று கேட்டார்கள். 'பணத்தை வசூலித்து வழங்க வேண்டியவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர்; அதைப் பெற வேண்டியவர் இந்தியாவின் பிரதமர்; அதற்காக நடைபெறும் விழாவில் போடப்பட்ட சுவரொட்டியில் படங்களை வெளியிடலாமா" என்கின்ற பிரச்சினை தான் பெரிதுபடுத்தப்பட்டதே. அல்லாமல், 'இந்தியாவின் பாதுகாப்புக்காகத் தி. மு. கழகம் உறுதுணையாக இருக்கிறது' என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை! . அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடித்துக் கொண் டிருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது! இன்றுள்ள சூழ்நிலை, 'இந்திரா காந்தி அம்மையார் தலைமையமைச்சராக நீடிப்பதா-இல்லையா' என்பதன்று} நமக்கிருக்கின்ற கவலையெல்லாம், இத்தியாவில் சனநாயகம் நீடிப்பதா - இல்லையா' என்பதுதான்; இதற்கு விடை காண வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்! தமிழரின் குருதியில் சனநாயக நெறி சனநாயக மரபுகள், இந்தியாவில் பல ஆண்டுக் காலமாகப் போற்றிப் பாதுகாத்துக் காப்பாற்றப் பட்டுவருகின்ற ஒரு முறையாகும். குறிப்பாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/8&oldid=1695785" இலிருந்து மீள்விக்கப்பட்டது