பக்கம்:சூளுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறிமுதல் செய்யச் செய்யச் 77 சொல்லப்பட்டது என்றால், தயவு தாட்சண்யம் இல்லாமல்- பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு இருந்து கொண்டிருக். கிறது என்று தானே பொருள்? நலம் காக்கும் மருந்து நாம் தர முயல்கிறோம் இன்றைக்கு நிலைமை என்ன? 'சனநாயகத்தைக் காப்பாற்ற - கொடுமைகளை வீழ்த்த-பொருளாதாரக் குற்ற வாளிகளையும், சமூக விரோதிகளையும் வீழ்த்தத்தான், இந்த. நெருக்கடிநிலை பிரகடனம்' என்று சொல்கிறார்கள்! சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற உங்களுக்குக் கொல்லி மலையைத் தெரியும்; நாமக்கல்லுக்கு அருகே இருக்கிறது; அந்தக் கொல்லி மலையை ஒரு காலத்தில் பரிபாலித்தவன் வல்வில்ஓரி என்பவன் ஆகும்; கடைஎழு வள்ளல்களில் அவனும் ஒருவன்; அந்த ஓரியினுடைய பரிசனை வேண்டி, வன்பரணர் என்ற புலவர் வருகிறார்! வருகின்ற நேரத்தில், அந்த ஓரியைப் பற்றி ஒரு பாடல் இயற்றிக் கொண்டு வருகிறார்; அந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?- "வல்வில்ஓரி மன்னா--உன்னுடைய கையிலே இருக்கின்ற அம்பு, யானையை வீழ்த்தத்தக்க அம்பு, அத்தகைய அம்பால் நீ ஒரு புலியை எய்தாய்; அந்த அம்பு புலியின்மீது பட்டு அதனுடைய உயிரைக் குடித்து - பிறகு புலியை விட்டுக் கிளம்பி அங்கே ஓடிக் கொண்டிருந்த மான் மீது பட்டு-அதன் உடலை ஊடுருவி - அங்கே திரிந்து கொண்டிருந்த பன்றியின் உடலிலே பட்டு அந்தப் பன்றியையும் கொன்றுவிட்டு-கடைசியாக அந்த அம்பு ஒரு புற்றிலே படுத்திருந்த உடும்பின் உடலிலே தைத்தது" என்று அந்த அம்பின் பெருமையைச் சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/81&oldid=1695858" இலிருந்து மீள்விக்கப்பட்டது