பக்கம்:சூழ்ச்சி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சூழ்ச்சி சேனபதி (மெதுவாக) : யார் அவருக்குப் பிறகு பட்டத் திற்கு வருவார் ? மந்திரி ஏன், அவருக்கு மகனில்லையா என்ன? சேனுபதி அது எனக்குத் தெரியாதா? இருந்தாலும் ராணுவின் உத்தேசம் என்னவோ? மந்திரி அதைப் பற்றித்தான் அவர் எல்லோர் முன் னிலையிலும் கூறப் போகிருர் நம்மை அழைத்திருப்பதும் அதற்காகத்தான்...வாருங்கள் ராணுவைப் பார்க்கப் போவோம். (இருவரும் புறப்படுகிருர்கள்.) சேனபதி ; ராணுவுக்கே தாம் இனிப் பிழைக்க முடியா தென்று தெரிந்துவிட்டதோ? - மந்திரி : ஆமாம். அப்படித்தான் அவரே என்னிடம் சொன்னர். w (பேசிக்கொண்டே போகிருர்கள்.) திரை காட்சி இரண்டு (இருள் பரவத் தொடங்கிவிட்டது. ராணு அஜேசிங் மஞ்சத்தில் படுத்திருக்கிருர் இறக்கும் தறுவாயிலும் அவர் முகத்தில் உறுதி தாண்டவமாடுகிறது. சித்துாரை மீட்க முடியாது போனதால் ஏற்பட்ட மனக் கவலையும் அதில் தோன்றுகிறது. ராணுவின் மகன் சாந்தசிங்கும், அண்ணன் ஊர்சிங்கின் மகன் ஹமீர்சிங்கும், மந்திரி, சேனபதி முதலி யவர்களும் கவலையோடு அருகே அமர்ந்திருக்கிருர்கள். விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/10&oldid=840669" இலிருந்து மீள்விக்கப்பட்டது