பக்கம்:சூழ்ச்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 17 ஹமீர்சிங் (கோபமாக) : சேனபதி, என்னேப் பயமுறுத் தப் பார்க்கிறீர்களா? சித்துரை எதிர்த்துப் போருக்குச் செல்லலாம் என்ருல் படை பலம் போதாது என்கிறீர் கள். வேறு வழியிலே சித்துரரை மீட்க மால்தேவின் இந்தச் சூழ்ச்சியையே பயன்படுத்தலாமா என்ருல் அதுவும் கூடாது என்கிறீர்கள். காயில்வரத்தின் மலேக் காற்று உங்களுக்கு இன்பமளிப்பதாகத் தெரிகிறது. நீங்கள் அனைவரும் இங்கேயே சுகமாக இருங்கள். நான் அந்தத் தேங்காய்ப் பரிசை ஏற்றுக்கொண்டு சித்துரருக் குத் தனியாகச் செல்லுகிறேன். - சந்தாரா தலைவர் : ஹமீர், நீ இவ்வாறு ஆத்திரமும் கோபமும் கொள்ளுவது நல்லதல்ல. சற்று முன்னேதான் சித்துரை எதிர்த்துப் போரிட உடனே படையெடுத்துச் செல்லவேண்டு மென்று கூறினய், இப்பொழுது தனியாக மணமகளுகப் போகவேண்டுமென்கிருய். அரசாட்சியை வகிக்கும் ஒருவருக்குப் பொறுமையும் கிதானமும் வேண்டும். ஹமீர்சிங் : மாமா, என்னே நீங்கள் மன்னிக்கவேண்டும். நான் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்துவிடவில்லை. போரிட்டுச் சித்துரரை வெல்ல இது சமயம் முடியா தென்று சேனபதியும் மந்திரியும் கினேக்கிருர்கள். அந்த கினைப்போடு அவர்கள் தலைமையில் போர் கடந்தாலும் வெற்றி என்பது என்றுமே கிடைக்காது. ஆதலால் வேறு வழியை கான் நாட முயலுகிறேன். சந்தாரா தலைவர் : இதுவா வேறு வழி? இது புவியின் ஆண்டிற்குள்ளே நாமாகவே சென்று சிக்கிக்கொள்ளுகிற வழியல்லவா? அதைத்தான் அவர்கள் வேண்டாமென்று தடுக்க விரும்புகிருர்கள். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/21&oldid=840680" இலிருந்து மீள்விக்கப்பட்டது