பக்கம்:சூழ்ச்சி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 19 சேனபதி நமது சேனைகளெல்லாம் கூடவே புறப்பட வேண்டுமா? N. - ஹமீர்சிங் வேண்டியதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நூறு வீரர்களோடு நீங்கள் என்னுடன் வரவேண்டும். நாம் சித்துருக்குச் செல்லுங்காலத்திலே தம்பி சாந்த சிங் எனக்குப் பதிலாக அரச பதவி வகிக்கட்டும். காம் புறப்பட்ட இரண்டு தினங்களுக்குப் பிறகு அவன் கமது படைகளோடு சித்துாரை நோக்கி வந்து வெளியிலே தங்கியிருக்கட்டும்... உள்ளே ஏதாவது எதிர்பாராத குழ்ச்சி கடந்தால் உடனே சித்தாரைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். சந்தாரா தலைவர் : ஹமீர். இதுவே உனது தீர்மான மென்ருல் கான் இனிமேலும் அதற்குத் தடை சொல்ல விரும்பவில்லை. இளமையின் துணிச்சலோடு நீ இந்தக் காரியத்தை எண்ணியிருக்கிருய். உன் தாயும் இப்படித் தான் கடந்து வந்தாள்... . . ஹமீர்சிங் : நான் என் தாய்க்குச் சரியான பிள்ளைதானே மாமா?...சரி, அதிருக்கட்டும். உங்களுடைய உத்தேசம் என்ன ? என்ைேடு சித்துருக்கு வருகிறீர்களா ? சந்தாரா தலைவர் : நீ கல்யாண மாப்பிள்ளையாக விற் றிருப்பதைப் பார்க்க எனக்கு இப்பொழுது ஆசை யில்லே. நான் எனது வீரர்களோடு சாக்தசிங்குக்குத் துணையாக வருகிறேன். ஹமீர்சிங் . அதுவேதான் என் விருப்பமும். மால்தேவ் ஏதாவது சூழ்ச்சி செய்தால் அதற்குப் பழிவாங்க ங்ேகள் என் தம்பிக்கு உதவியாக இருக்கவேண்டும். சித்துாரி லிருந்து ஒற்றர்களின் மூலம் உங்களுக்கு நான் தினமும் சேதி அனுப்புகிறேன்...இப்போது சபை கலையலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/23&oldid=840682" இலிருந்து மீள்விக்கப்பட்டது