பக்கம்:சூழ்ச்சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சூழ்ச்சி SeeAMAMAAAA கமலாதேவி : நான் விதவையென்ற விஷயத்தை யாரும் தங்களிடம் தெரிவிக்கக்கூடாதென்று அவர் ஏற்பாடு செய்திருக்கிரு.ர். அப்படி இந்த விஷயம் தெரியாமலிருக் கும்போது அவரோடு நீங்கள் கெருங்கிய உறவு கொண்டு விட்டால் பிறகு தமது ஆட்சிக்குத் தொந்தரவில்லே யென்பது அவருடைய எண்ணம்... ஹமீர்சிங்: நான் நெருங்கி உறவுகொள்ள வராவிட் டால்...? - - கமலாதேவி அவரே நான் விதவையென்பதை எங்கும் வெளிப்படுத்தித் தங்களுக்கு இழிவு கொண்டுவர கினைத் திருக்கிருர்.விதவையை மணந்த உங்களுக்குப் பணிந்து ரஜபுத்திர வீரர்கள் கடக்க மறுப்பார்கள் என்பது அவர் கம்பிக்கை. ஹமீர்சிங் அவனுடைய சூழ்ச்சி அந்தவகையில் வெற்றி பெறலாம் என்றுதான் கான் சினேக்கிறேன்... மால் தேவின் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்வ தையே மக்கள் வரவேற்கவில்லை. கமலாதேவி அவருடைய சூழ்ச்சி பலிக்காது; விதவை என்பதை நானே தங்களிடம் மணமாகிய இன்றே கூறு வேன் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. என்னல் உங்கள் வம்சம் மாசுபடும் என்று தங்களுக்குத் தோன் றினுல் இப்பொழுதே என்னேத் தள்ளிவிடுங்கள். என் னேத் தங்களுடைய புனிதமான கரங்களால் தொட வேண்டாம்...தங்கள் வாளும் என்மீது பட்டால் அது மாசடைந்து விடும்...நானே என் கையால் இந்த உயிரை மாய்த்துக் கொள்கிறேன்...ஆனல்... ஹமீர்சிங் என்ன தயங்குகிருய்? உன்னுடைய உள்ளக் கருத்தையெல்லாம் ஒளிக்காமல் கூறிவிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/42&oldid=840703" இலிருந்து மீள்விக்கப்பட்டது