பக்கம்:சூழ்ச்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 59. மால்தேவ் (மகிழ்ச்சியோடு) அப்படியா சொன்னன்: அப்படியானல் நீ இங்கேயே தங்கிவிடு. சுல்தான் அலாவு தினிடம் சொல்லி எனக்குப் பின் உன் மகனே சித்துர ரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு வேண்டிய சம்ம தத்தைப் பெற்றுவிடுகிறேன். கமலாதேவி : கானிங்கிருக்கும் வரையில் ராணு ஹமீர் சிங் சித்துரளின் மேல் படையெடுத்து வரவும் இனி (ԼՔlգ-եւմն՞:51, - மால்தேவ் : எதளுல் ? கமலாதேவி : இனிமேல் அவர் போருக்குப் புறப்பட் டால் என்பதிேருக்கும் ஆசையால் என்னே மீட்பதற். காகவே அப்படிப் புறப்படுவதாக மக்களும் போர்வீரர் களும் கினைப்பார்கள். அதனல் அவர்கள் போரில் கலந்துகொள்ள விரும்பமாட்டார்கள். மால்தேவ் (மகிழ்ச்சியோடு) . கமலா, கான் போட்ட திட்டம் எப்படியோ ஒரு வகையில் எதிர்பாராதவிதமாக வெற்றிபெற்றுவிட்டது. இனி எனக்குக் கவலையில்லே. நீ இங்கேயே தங்கிவிடலாம். கமலாதேவி : எனக்கு இங்கேயே தங்கியிருக்க விருப்ப மில்லை. குழந்தையின் ஆண்டு நிறைவு விழாவை முடித்துக் கொண்டு கான் எங்கேயாவது போய்விடு கிறேன். மால்தேவ் . கமலா, இப்படியெல்லாம் நீ கோபித்துக் கொள்ளக்கூடாது. இதைப் பற்றியெல்லாம் கான் மதாரியாவிலிருந்து திரும்பிய பிறகு அமைதியாக யோசித்துக்கொள்வோம். போர் வீரர்களெல்லாம் புறப் படச் சித்தமாயிருக்கிருர்கள். நான் போய் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/63&oldid=840726" இலிருந்து மீள்விக்கப்பட்டது