பக்கம்:சூழ்ச்சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 65 கமலாதேவி : என் தந்தையின் சூழ்ச்சியிலே ஓரளவ வது எனக்குத் தெரிந்திருக்காதா? . ஹமீர்சிங் உன் தந்தைக்கு நீ சரியான மகள்தான். இப் பொழுது கான் சேனபதியைப் பார்த்து வருகிறேன். - (புறப்படுகிருன்) திரை காட்சி எட்டு (டெல்லியிலே சுல்தான் அலாவுதீன் ஆட்சி மீண்ட பம். அலாவுதீன் அரியணையில் வீற்றிருக்கிருர். மால்தேவ் முன்ல்ை கின்று பேசிக் கொண்டிருக்கிருன்.) அலாவுதீன் : மால்தேவ், மதாரியா காட்டுப் போர் என்ன ஆயிற்று? எதற்காக இப்பொழுது அவசரமாக இங்கு வந்திருக்கிருய்? மால்தேவ் : நான் மதாரியாப் போரைப் பாதியிலேயே கிறுத்தி விட்டு இங்கு வரவேண்டியதாய்விட்டது. அலாவுதீன்: அப்படி என்ன விசேஷம் ? சித்துரில் எல் லாம் ஒழுங்காகத்தானே இருக்கிறது? மால்தேவ் : நான் மதாரியா காட்டை நோக்கிப் படை யோடு சென்றிருந்த சமயம் பார்த்து அந்த ஹமீர்சிங் சித் துருக்குள்ளே நுழைந்துவிட்டான். . அலாவுதீன் (ஆச்சரியத்தோடு) என்ன? அதெப்படி முடி யும்? சித்துரைக் காப்பதற்கும் வீரர்கள் இருந்தார்க ளல்லவா ? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/69&oldid=840732" இலிருந்து மீள்விக்கப்பட்டது