பக்கம்:சூழ்ச்சி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி . 69 (மறுபடியும் போரோசை கேட் கிறது; வீரர்கள் கோஷமிட்டு வாளை வீசிப் போகிருர்கள். ஹமீர்சிங் வாளேந்தி வேகமாக வருகிருன். வலது கையிலே ஒரு கட்டிருக்கிறது.) கமலாதேவி : அதோ உங்கள் ராணுவும் வந்து விட்டார். ராணு, மேற்கு முனையிலே போர் எப்படி நடக்கிறது? ஹமீர்சிங் நமது வீரர்கள் அற்புதமாகப் போரிடுகிருர் கள். இதற்குள்ளே அலாவுதீனின் வீரர்களில் காற்பதின யிரம் பேர் அந்தப் பகுதியில் பலியாகி விட்டார்கள். கமலாதேவி (திடுக்கிட்டு) ராணு, உங்கள் வலதுகையில் என்ன கட்டு ? ஹமீர்சிங் : அது ஒன்றுமில்லை. ஏதோ ஒர் அம்பு பட்டு விட்டது. கமலாதேவி : காயம் அதிகமாகிவிட்டதா? ரத்தம் கொட்டியிருக்கிறதே? ஹமீர்சிங் : அதெல்லாம் ஒன்றுமில்லை; இப்போ அதைப் பற்றி என்ன பேச்சு? நீ வடக்கு முனேயைக் பார்த்து விட்டுவா - கான் கோட்டை வாசலுக்குச் சென்று வரு கிறேன்....அங்கே இப்பொழுது சண்டை மும்முரமாக கடக்கிறது. மால்தேவ் அங்கே தன் கடைசித் தாக்குதலேத் தானே கடத்துகிருன். சாந்தசிங் அங்கே போரிடுகிருன். அவனுக்குத் துணையாக நான் போகவேண்டும். (வீரர்களின் ஆரவாரம். ஹமீர்சிங் கோட்டை வாசலை கோக்கி விரைந்து செல்கிருன். சேன பதி வருகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/73&oldid=840737" இலிருந்து மீள்விக்கப்பட்டது