பக்கம்:சூழ்ச்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சூழ்ச்சி - சேனபதி தந்தைக்கும் தாய்க்கும் வாக்களித்தபடி சித்தாரை மீட்க முடியவில்லேயே என்று அவர் சதா கவலேயால் மனமுடைந்துவிட்டார். அதுவே அவருடைய ஆயுளைக் குறைத்துவிட்டதென்று நினைக்கிறேன். மந்திரி : ராணு தம்மால் ஆனவரை முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார். ஒரு முறையா இரு முறையா? மூன்று முறை சித்துரரை நோக்கிப் படை எடுத்துச் சென்ருர், சேபைதி : ஆமாம்; ராணு தமது வாக்குறுதியை நிறை வேற்ற எல்லா முயற்சியும்தான் செய்தார். உயிரை மதியாமல் போரும் செய்தார். ஆளுல் கான்தான் அவ. ருக்கு வெற்றியளிக்கக்கூடிய திறமையுள்ள சேனாபதி யாக இருக்கவில்லே. குற்றமெல்லாம் என்னுடையது தான். - மந்திரி : சேனபதி, கான் உங்களிடம் குறை காண்பதாக கினேக்கக்கூடாது. நீங்கள் அற்புதமாகச் சண்டை செய் தீர்கள். தமது ரஜபுத்திர வீரர்களும் உங்களுடைய சாகசச் செயல்களேக் கண்டும், வீர கோஷத்தைக் கேட் டும் பரவசமடைந்து உங்கள் ஆணேப்படி போரிட்டார் கள். அதில் சந்தேகமே இல்லே. சேனுபதி (முகவாட்டத்தோடு) . ஆல்ை வெற்றிதான் கிடைக்கவில்லே. மந்திரி அதற்கென்ன செய்யலாம்? சித்துரைக் காப்ப தற்கு நமது சேனேயைப் போலப் பத்து மடங்கு பெரிய சேனை இருக்கிறது. அலாவுதீன் அந்த நகரத்தைத் தன் கைவசம் வைத்துக் கொள்வதற்காக எத்தனையோ பெரிய ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிருன். சித்துார்க் கோட்டைச் சுவர்களின் பலமும் அவனுக்கு உதவியாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/8&oldid=840741" இலிருந்து மீள்விக்கப்பட்டது