பக்கம்:செங்கரும்பு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சிலம்பின் உதயம் புலவர் சாத்தனரால் கண்ணகியின் வரலாற்றை உணர்ந்து, சிலப்பதிகாரம் என்ற பெயரால் அந்த வரலாற்றைக் காவியமாகப் பாடத் தொடங்கிளுர் இளங்கோவடிகள் என்பதை முன்பு பார்த்தோம். அது முதல் அவர் அந்த வரலாற்றுக்குரிய செய்திகளே யெல்லாம் மெல்ல மெல்ல விசாரித்து அறிந்து கொண்டார். சோழநாட்டிலிருந்தும் பாண்டி நாட்டி லிருந்தும் வந்த மக்களை உசாவிப் பலவற்றைத் தெரிந்துகொண்டார். எப்படி எப்படிக் காவியத்தை அமைக்கவேண்டும் என்று சிந்தனையில் ஆழ்ந்தார். ஒருவாறு திட்டம் செய்துகொண்டு காவியத்தை இயற்றத் தொடங்கினர். தம்மிடம் தமிழ் பயிலும் மாளுக்கர்களுக்குச் சொல்லி, எழுதும்படி செய்தார். எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான காவியமாக அமைக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். - சிலப்பதிகாரக் கதையை மூன்று காண்டங்களாகப் பகுத்துக்கொண்டார். பூம்புகாராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் கோவலன் கண்ணகியை மணம் செய்து கொண்டு வாழ்ந்ததும், பின்பு மாதவியினிடம் மனம் செல்ல அவளுடன் சென்று இருந்ததும், பின்பு மனம் வேறுபட்டு அவளிடமிருந்து வந்து கண்ணகியோடு புறப்பட்டு உறையூரை அடைந்ததும் ஆகிய வரலாறுகள் உள்ள கதைப் பகுதிக்குப் புகார்க் காண்டம் என்று பெயர் கொடுத்தார். கோவலன் காட்டின் வழியே சென்று மதுரையை அடைந்ததும், கண்ணகியை ஆயர் சேரியிலே விட்டுவிட்டுச் சிலம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/89&oldid=840829" இலிருந்து மீள்விக்கப்பட்டது