பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 செங்கோல் வேந்தர் எவையோ சில ஒலிகளே ஒலித்து விட்டான். அவ்வாறு முதற் கண் எழுப்பப்பட்ட ஒலிகள் பொருள் உணர்த்த எழுந்தவை வல்ல என்பது யெஸ்பர்சன் கொள்கை. கேட்ட்ோரும் உடனே பொருள் உண்டாக்கிக் கொள்ளவும் இல்லை; பொருளே அறிந்து விடவும் இல்லை. இன்றுகூட குழந்தை யச்சூழ்ந்துகொண்டு தாயாரும் பிறமகளிரும் " என்னப் பார் உன்னைப் பார்' என்றும், ' என்னைப் பார்த்துச் சிரிக் கிருன் உன்னைப் பார்த்துச் சிரிக்கின்ருன் என்றும், "உன் அப் இப்பொழுது வருவார்” என்றும், பலவாறு தமக்குள் பேசிக்கொள்ளுகிருர்கள். ஆனாலும், குழந்தை அறிவது ஒன்றும் இல்லை. கிளிகள், நாய்கள், பூனைகள் முதலிய விகளிiாட்டுப் பொருள்களோடு விளையாடுகின்ற மக்ளிரும் ஆடவிரும் அப்பறவைகளோடும் விலங்குகளோடும் பேசுவது போல்க் கொஞ்சிக் குலவிப் பேசுகிருர்கள். ஆயினும் அவை ஒன்றும் புரிந்துகொள்ளுதல் இல்லை. அவ்வாறேதான் பழங் கால மனிதர்களும், ஒன்றும் அறிந்துகொள்ளாத மக்களி டையே பேசி இருப்பார்கள். நாளடைவில்தான் பொருள் தோன்றியிருக்கும். ~ . . . . மொழி என்பது பழக்கத்தினல் ஏற்படுவது. பல்வேறு ஒலிகள் ஒரு பொருளைக் குறிப்பதற்கு இருப்பவும், நாளடை வில் மக்கள் ஏதாவது ஓர் ஒலித்தொகுதியை, ஏதாவது ஒலி யினக்குறிப்பிட்ட ஒரு பொருளில் வழங்கத் தலைப்பட்டிருப் பார்கள். சொற்கள் ஒவ்வொரு பொருளுக்குரியவை என்ப தற்குரிய காரணங்களைத் திட்டமாகக் கூறுதல் இயலாது. சொற்கள். தாந்தாம் குறிக்கும் பொருளினைக் குறிப்பதற்கு மக்களாற் பெரும்பாலும் ஏதேச்சாதிகாரமாக இடப்பட்ட குறியீடுகள் என்று கொள்ளுதலே பொருந்தும், சில சொற் களில் மாத்திரமே ஒலியும் பொருளும் ஒத்து இயைந்திருத் தல் கூடும். பல சொற்களில் இத்தகைய இயைபு காண்பது அரிது. 'ழ்' ஆகிய ஒலி தமிழில் இனிமையை அல்லது அழகினைக் குறுக்கின்ற ஒர் ஒலி என்றும், அழகு. குழல், யாழ். தமிழ் அமிழ்து என்று சொற்களில் அது காணப்படுகின்றது என்றும் கூறுவதாயின், அழுகை,