மொழிக்கலே 95 கட்கும் உள்ள பொதுவான ஒலிவிதங்களைப் பேசுதல் ஒலி யியல் ஆராய்ச்சி' என்றும் குறிப்பிட்ட ஒருமொழி ஒலி களே எவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளது என்னும் ஆராய்ச்சி " ஒலியவகை என்றும் கூறப்படும். காட்டாக, க என்பது வெவ்வேறு விதமாகத் தமிழில் உச்சரிக்கப்படு இன்றது. கட்டு என்ற இடத்தில் வருகிற 'க'வைப் போலவே, அகம் எனும் பொழுது உச்சரிக்கப்படுதல் இல்லை s அஃகம், அஹம், என்றும் அஃம் என்றும் வெவ்வேறு முற்ை யில் உச்சரிக்கப்படலாம். இவை பொருள் வேறுபாட்டினை உண்டாக்குவன அல்ல. அஃம் என்ருல் வீடு என்றும், அகம் என்ருல் மனைவி என்றும், அஃகம் என்ருல் குழந்தை என்றும் வெவ்வேறு பொருள் இருப்பதாகவைத்துக் கொண் டால், நம்முடைய மொழியில் ஹ ஃ க.க போன்ற ஒலிகள் எழுத்தில் அவசியமாக எழுதிக் கொள்ளத்தக்க நிலையில் உள்ளன என்று ஆகும். அவ்வாறு இருந்தால் அவை ஒலிய வகை வேறுபாடு உடையன எனப்படும். அவ்வாறு இல்லை என்பது வெளிப்படை எனவே 'க' வை வெவ்வேறு வித மாக உச்சரிப்பதால் ஒலியியல் வகை வேறுபாடு (ஹ, ஃக, க.) தமிழில் உண்டு. ஆனலும், ஒலியவகை வேறுபாடு இல்லே என்பது கருத்து. ... • .. சொல்லியல் வகை என்பது ஒரு சொல்லின் அடிவேர் பற்றிய ஆராய்ச்சி ஆகும். வாழ்கிருன் என்ற சொல்லில் "வாழ்' என்னும் அடிவேர் இருக்கிறது என்றும், கற்ருர்கள் என்பதில் கல்’ என்ற அடிவேர் இருக்கிறது என்றும் இவைபோலப் பிற சொற்களில் பிற அடிவேர்கள் இருக் .கின்றன என்றும் இவ்வகை ஆர்ாய்ச்சியிற் காட்டப்படும். பொருளியல் வகை என்பது ஒரு மொழியின்கண் உள்ள சொற்கள் காலந்தோறும் வெவ்வேறு பொருளில் வேறு பட்டு இப்பொழுது எவ்வெங்கிலேகள் அடைந்திருக்கின்றன என்பதைக் காட்டுவதாகும். தொல்காப்பியர் காலத்தில், அதாவது இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பாட்டி என்ற சொல் பெண்காயினேயே குறிக்க
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
