பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹦 3 செங்கோல்.வேந்தர் சொற்கள் ஒப்புமை கார ண ம க த் தோன்றுபவை எனப்படும். இவையல்லாமல், சில வேளைகளில் ஒருவர் ஒரு மொழி யினின்ருே, வேறு பல மொழிகளில் இருந்தோ கடன் வாங்குதல் உண்டு. மொழிக்கலே ஆராய்ச்சிக்கு இவ்வறிவும் வேண்டும். அதாவது எவ்வெச் சொற்கள் குறிப்பிட்ட மொழியின்கண் தொன்றுதொட்டுத் தோன்றியுள்ளன வென்றும், எவ்வெச் சொற்கள் பிற பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளன என்றும் ஒருவர் அறிதல் வேண்டும். மேலே குறிப்பிட்ட ஒலியியல்வகை, ஒலியவகை, பொருளியல்வகை ஒப்பியல்வகை ஆகிய இவற்றை ஒருவர் தம்து மொழியறிவு கொண்டே விளக்கிவிடலாம். ஆனல் இன்னின்ன சொற்கள் பிறமொழியிலிருந்து கடன் வாங்கப் பட்டன என்பதை அறியப் பிறமொழியறிவும் வேண்டும். மொழிகள் மேலே கூறிய ஐந்து வகைகளில் மாறுதல் அடைகின்றன என்பதை மனத்திற்கொண்டு மொழி யாராய்ச்சிகள் செய்யப்படுவதால் மொழிக்கலை வளர்ந்து வருகிறது. -