பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில அகராதிகளில் தமிழ்ச்சொற்கள் ஆங்கில மொழி உலகிலுள்ள பல்வேறு மொழிகளில் வழங்கும் சொற்கள் பலவற்றைப் பயன்படுத்திக்கொண் டிருக்கிறது என்பது பலர் அறிந்த உண்மை. உலக மக்கள் தொடர்பு காரணமாக உலக மொழிகள் பலவற்றிலிருந்து அப்பொழுதைக்கப்பொழுது ஆங்கில மொழி கடன் வாங்கிப் பயன்படுத்திய சொற்கள் உண்டு. சிலவேளைகளில் கருதிய அவ்வப்பொருளைக் குறிப்பதற்குரிய துல்லியமான சொற். கள் ஆங்கிலத்தில் இல்லாத காரணத்தால், அவ்வப் பொருளைக் குறிப்பதற்கு அந்தந்த மொழிச்சொற்களேயே ஆங்கிலம் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது. சிலவேளை களில், பிற நாடுகளுக்குச் சென்ற ஆங்கிலேயர்கள் தமது காட்டிற்குத் திரும்பிச்சென்ற பிற்பாடு தமது பேச்சிலும் எழுத்திலும் பிறநாட்டுச் சொற்கள் சிலவற்றை வழங்கிய காரணத்தால் ஆங்கில அகராதிகள் இடம் பெற்றவையும். உண்டு. ஆங்கில எழுத்தாளர்கள் சிலர் தேக்கரே செளத்தே, ரூடியார்டு கிப்ளிங்கு, தாம்புசன் முதலியவர்கள் இயற்றிய பனுவல்களில் இந்தியச்சொற்கள் சிலவற்றைப் பயன்படுத்தி யுள்ளனர். கி. பி. 16-வது நூற்ருண்டு முதல் 19, 20ஆம் நூற்ருண்டு ஆங்கிலேயர்களுக்கு இந்தியா தேசத்தோடு ஏற்பட்ட வாணிகத் தொடர்பிலுைம், அரசியல் தொடர்பின. லும் ஆங்கில மொழியிற் சென்றேறி வழங்கிய சொற்கள் ஆங்கில அகராதிகளில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய,