பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 செங்கோல் வேந்தர் சொற்களுள் தமிழ்ச் சொற்கள் சில இக்கட்டுரையில் எடுத் துக்காட்டப்படும், 'அனேக்கட்டு ' என்ற சொல் 1784இலேயே ஆங்கிலத் தில் வழங்கியுள்ளது. இஞ்சி” என்ற சொல்லும் ஆங்கி லத்திற்குச் சென்று ஜிஞ்சர் என்று வழங்குகிறது. ஜிஞ்சர் என்பது சமஸ்கிருத சிருங்கவேரா என்ற சொல்லின் திரிபு எனச் சிலர் கூறுவர். சிருங்கா என்பது கொம்பு என்னும் பொருளுடையது என்றும், வேரா என்பது உடம்பு என் னும் பொருளுடையது என்றும், சிருங்கவேரா என்னுஞ் சொல்.கொம்பு போன்ற வடிவுடைய பொருளேக் குறித்தது என்றும் அவர் பகர்வர். மலையாள மொழியிலுள்ள இஞ்சி வேர் என்பதன்திரிபாகச் சிருங்கவேரர்” என்பது இருத் தல்கட்டுமென்க்கர்னல் பூல் என்பார் கருதுகிருர், மலையாள "இஞ்சிவேர் ஒருகாலத்தில் தமிழ் இஞ்சிவேர் தான் என்பது தெளிவு. 'ஒல்' என்னுந் தமிழ்ச்சொல் "ஒல’ என மலையாளத் தில் காணப்படுகிறது. இதுவே போர்ச்சுக்கீசிய மொழியில் "ஒல்லா என வழங்கத் தொடங்கி, போர்ச்சுக்கீசிய - ஆங்கி லேய த்ொடர்பினுல் ஆங்கிலத்திலும் 'ஒல்லா” என 1622 இலேயே வழங்கத் தலைப்பட்டதாகத் தெரிய வருகிறது. ஒலையோடு தொடர்புடைய இலை என்னும் சொல் தொகைச்சொல்லாக ஆங்கிலத்திற் சேர்ந்திருக்கிறது. தமிழ்ப் பச்சிலே ஆங்கிலத்தில் " பட்சோலை ' என 1845இல் போய் வழங்கத் தலைப்பட்டதாகத் தெரிகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் காணப்படும் 'பச்சிலை மணமுடைய சாற்றினத்தரும் ஓர் இலையாக ஆங்கிலத்திற் குறிக்கப்பட்டிருக்கிறது. முப்பத்திருவகை ஒமாலிகைகளில் ஒன்ருகப் பச்சிலை மதிக்கப்பட்ட தென்பது சிலப்டி கிகாரத்தால் அறியப்படுகிறது. ‘கஞ்சி' என்னும் சொல் 1698 முதல் ஆங்கிலத்தில் வழங்கலுற்றமை தெரியவருகிறது. இராணுவச் சிறைக்குப் பெயராகக் "கஞ்சி வீடு' என ஆங்கிலத்தில் வழங்கியுள்ள