பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில...தமிழ்ச்சொற்கள் 109 னர். சிறையகத்தே சோறு போடாமல் கஞ்சியே வார்க்கப் பட்டமையால் "கஞ்சி வீடு' என்பது சிறைக்குரிய பெயராக மதிக்கப்பட்டது. - தமிழ்க் "கட்டு மரம் 1697இல் ஆங்கிலத்தில் வழங்கத், தலைப்பட்டது. “கட்டமரான்” என்ற வடிவில் ஆங்கிலத்திற் சென்றேறி வழங்கிய இச்சொல் தோணியைக் குறித்து, பிறகு தாக்குக் தோணியைக் குறிக்கத் தலைப்பட்டது :நாளடைவில் ஏட்டிக்குப்போட்டி செய்யும் பெண்டிரைக் குறிக்கத் தலைப்பட்டது. வம்புக்காரி என்ற பொருளிற். * கட்டமரான்" என்னுஞ் சொல் வழங்கத் தலைப்பட்ட ஆண்டு 1833. - "கணக்குப் பிள்ளை' என்னுந் தமிழ்ச் சொல் 1680இல் ஆங்கிலத்தில் " கணக்கப் பொருளை ' என்ற வழக்கின தாயிற்று. - " கயிறு’ என்பது திருக்குறளில் 'திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு" என முன்னரே ஆளப்பட்டுள்ளது. கயிற். றிற்ை பிணிக்கப்பட்டுச் செல்லும் மிடா "கயிறு பிணித்துக் காடி வைத்த கலன்’ எனப் பெரும்பாணுற்றுப் படையிற். பேசப்பட்டுளது. இது மலையாளத்திற் கயறு என வழங்கு வது உண்டு ; அங்குத் தேங்காய் காரிலிருந்து திரிக்கப்படும் கயறு இதனுற் குறிக்கப்படும். இது 1582இல் 'காயர்' என ஆங்கிலத்தில் வழங்கலுற்றது. * 'கறி" என்னுந் தமிழ்ச்சொல் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்கி வருவதொன்று. சோறுங் கறியும் அடிப்படைத் தமிழ்ச்சொற்கள். கறிக்கப்படுவது கறி. இது. இக்காலத்தில் கடிக்கப்படுவதெனக் கூறப்பட்டு வருகிறது. விலங்குகள் இலைகளைக் கடித்துத் தின்றன என்று குறிக்க. வேண்டிய இடங்களிற் சங்ககால இலக்கியங்களுட் கறித் தன. எனவே குறிப்பிட்டுள்ளனர். 'மடப்பினை - வேளே வெண்பூ கறிக்கும் ஆளில் அந்தம் ஆகிய காடே” எனப் புறநானூற்றுப் பாடல் ஒன்றனுள் வந்துள்ளது. 'திரு.