பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#13 செங்கோல் வேந்தர் மருப்பு இரல......செழும்பயறு கறிக்கும் புன்பன் மாலே ’ எனப் பெருங்குன்றுக் கிழார் பாடிய குறுக்தொகைப் பாட வில் வந்துளது. இவ்விடங்களில் கறித்தல் பொருளில் அமைந்துள்ளது. "கறி" என்னுங் தமிழ்ச்சொல் கன்ன டத்தில் “கரில்” என வழங்கிப் போர்ச்சுக்கீசிய வழக்கிலும் 'களில்' என்று ஆகி, ஆங்கிலத்தில் கர்ரி’ என்று 1898 முதல் வழங்கிவருவது அறியப்படுகிறது. ஐரோப்பிய உணவு விடுதிகளில் 'கர்ரி இடம்பெற்றுள்ளது. “காசு" என்னுங் தமிழ்ச்செர்ல் சின்ன நாணயத்தைக் குறிப்பதற்காக 1598இல் ஆங்கிலத்தில் எடுத்து வழங்கப் பட்டது. "வாசி இரவே காசு நல்குவீர்” என்ற திருஞான சம்பந்தர் வாக்கு 7ஆம் நூற்ருண்டில் எழுந்தது. "குயில்’ என்னுக் தமிழ்ப் பறவைப் பெயர் 'கோயல்’ என்று ஆங்கிலத்தில் 1826இல் வழங்கத் தலைப்பட்டதாகத் தெரிகிறது. சமஸ்கிருதத்தில் கோகிலா என்று இருந்தா லும், அதனுடைய திரிபாக இதனைக் கொள்ளாமல், குயிலு வது குயில் என்ற தமிழ் அடிவேர்ப் பொருளிலிருந்து கொள்ளுவதுதான் பொருந்தும்; குயிலுதல் என்ருல் கூவி யழைத்தல் என்பது பொருள். இப்பொருளில் இச்சொல் பழைய தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது. 'கொடி யிடை சோலேக் குயிலோன் என்னும் படையுட் படுவோன் பணிமொழி கூற' என்ற சிலப்பதிகார வேனிற் காதைப் பகுதி சிறந்த எடுத்துக்காட்டு. 'கொல்கரை கறும்பொழிற் குயில்குடைந்து திரித்த புதுப்பூஞ் செம்மல் குடி” என கந்தத்தனர் சிறுபானுற்றுப்படையிற் பாடினர். "குருந்தம்” என்னுக் தமிழ்ச்சொல் ஒன்பது வகை மணி களில் ஒன்ருக மதிக்கப்படுவது. இது "குருவிந்தம்” என் றும், 'விந்தம்' என்றுக் தமிழில் வழங்கியுள்ளது. சிலப்பதி காரத்தில் "பதுமமும் லேமும் விந்தமும் படிதமும் ' என்ற விடத்தில் விக்தம் எனப் பேசப்பட்டுள்ளது குருவிந்தம் அல் லது குருந்தம் ஆகும். குருந்தம் என்னுஞ் சொல் ஆங்கிலத்