பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செங்கோல் வேந்தர் "அல்லற்பட் டாற்ரு தழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை." எனக் கூறினர். எனவே, தான் கூறியதைச் செய்து முடிக்காது போனல், தன் குடிமக்கள் கண்ணிர் வடித்துத் தன்னக் கொடியன் எனக் கூறட்டும் எனப் பாண்டியன் சொல்லியதிலிருந்து, அவன் செங்கோலினகை ஆட்சி செய்து மேன்மேலும் தனது செல்வம் பெருகவேண்டும் என விரும்பினன் என்பது ஊகித்து அறிந்துகொள்ளப் படும். கவிஞர்கள் செங்கோல் மன்னரைப் பாராட்டியும் கொடுங்கோல் வேந்தரை இகழ்ந்தும் தத்தம் நூலின்கண் உரைத்தனர். உதாரணமாக, பாலே பாடிய பெருங்கடுங்கோ என்ற கவிஞர் தாம் பாடிய கவிப்பாட்டு ஒன்றில், பாலைவன மணல் சூரிய வெப்பத்தால் கருகிக் காய்ந்து கிடப்பதற்கு உவமையாகக் கொடுங்கோல் மன்னனுடைய கொடுமை. யால் வாடிக்கிடந்த மக்களைக் குறிப்பிட்டார். 'கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின்’ என்ற பாலைக்கலி (செய்,8) அடிகள் காண்க. பட்டினப்பாலே பாடிய உருத்திரங்கண்ணனர் கரிகால் வளவனது கூரிய வேல் போன்று காடு கடுமையாக இருந் தது என்றும், அவனுடைய செங்கோல் போன்று அவன் தலைவியின் தோள்கள் தண்ணியனவாக இருந்தன என் அறும் குறிப்பிட்டார். "திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே” என்பன அவ்வடிகள். எனவே, உவமைகளில் வைத்து ஆளும் வகையான் கவிஞர்கள் செங்கோலைச் சிறப்பித்தனர் என் பது பெறப்படும். மக்களும் கொடுங்கோல் மன்னர் வாழும்