பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில...கமி ழ்ச்சொற்கள் 111 தில் 'கொருந்தம்” என 1728இல் வழங்கலுற்றதாகக் தெரிகிறது. “கூலி' என்னுஞ் சொல் தமிழில் 'தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் காலத்திற்கு முன்னலேயே வழங்கியதொன்று. உழைப்பிற்கொத்த ஊதியம் கூலி எனப்பட்டது. உழைப் பாளரைக் கூலிகள் என்றனர் பிற மொழியினர்கள். போர்ச் சுக்கீசிய மொழிவழியாக ஆங்கிலத்தில் இச்சொல் 1598இல் வேலையாள் என்ற பொருளிற் சென்றேறி உள்ளது. "தயிர்” என்ற சொல் சங்க காலத் தமிழிலக்கியங்களிற் பெருவாவிற்ருய் வழங்கியதொரு சொல். குறுந்தொகையில் "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ என வந்துள் விதி. பெரும்பாணுற்றுப்படையில் " கம்புமுகிழ் உறை யமை ந்ேதயிர் கலக்கி ' என்று கடியலூர் உருத்திரங் கண்ணனர் கூறியுள்ளார். மலைபடுகடாத்தில் " கானிலை எருமை கழைபெய் தீந்தயிர்' என வந்துள்ளது. இச்சொல் மலேயாளத்திலும் இதே வடிவத்தில் வழங்குகிறது. இேல் ஆங்கிலத்தில் இச்சொல் தயிர் எனச் சென்று வழங்கக் கலப்பட்டது. ஆக்ஸ்போர்டு அகராதியில் இது இடம்பெற்றுள்ளது. சமஸ்கிருதத்திலுள்ள தக்ரா என்ற சொல் தண்ணிரோடு கலந்த தயிரை அதாவது மோரினக் குறிக்கும் என்றும், தமிழ்ச்சொல் தயிர் ' சமஸ்கிருதச் சொல்லினின்று வந்தது என்றும் சிலர் கூறுவர். ஆயினும், இது பொருந்தாது. சமஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஏனேய இந்திய - ஐரோப்பிய மொழிகளில் இவ்வடிவம் காணப்படவில்லையாதலாலும், தமிழொடு தொடர்புடைய திராவிடமொழிகளில் இவ்வடிவம் வ்ழங்குவதாலும், இச் தொல் முதலில் தமிழிலேயே வழங்கிற்று என்க் கொள்ளு கலே பொருந்துவது. "கக்கு" என்பது தமிழகத்திலும், கேரளத்திலும் பெருவரவிற்ருய் வழங்கும் ஒரு சொல். தமிழில் தேக்கு