பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 செங்கோல் வேந்தர் எனப்படுவது மலையாளத்தில் தேக்கு என வழங்குகிறது. 'தெய்வமடையில் தேக்கிலேக் குவைஇறும் பைதிர் கடும் பொடு பதமிகப் பெறுகிவிர் எனப் பெரும்பாணுற்றுப் படையில் வந்துள்ளது. 'வேக்கின் அகவிலே என்பது அகநானூற்றிற் காணப்படுகிறது. போர்ச்சுக்கீசிய மொழி வழியாக ஆங்கில மொழிக்கு 1698-இல் இச்சொல் சென் முள்ளது. அழுத்தமான நல்ல மரத்தைக் குறிப்பதற்குத் தேக்கு என்னுஞ்சொல் இந்த மொழிகளிற் பயன்பட்டுள் வளது. 1842-ஐ ஒட்டிய ஆண்டுகளில் 'ஆப்பிரிக்கன் டீக் என்றும்.கியூசிலாந்து டீக்” என்றும் மரவகைகள் சில ஆங்கிலத்திற் பெயர்பெற்று வழங்கத் தலைப்பட்டன, "தோப்பு என்னுஞ் சொல் 1698-இல் ஆங்கில மொழி யில் வழங்கப்பட்டிருக்கிறது. மரங்கள் நிரம்பியுள்ள இடம் தொகுப்பு அல்லது தோப்பு எனப்பட்டது. தமிழ், மலேயாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழி களில் தோப்பு என்ற வழக்கு உண்டு. இதனைச் சில ஆங்கில அதிகாரிகளும் பயணிகளும் எடுத்து வழங்கத் தலைப்பட்டார்கள். "பிண்ணுக்கு' என்பது தமிழில் பிழி அல்லது பிள் என்ற அடியிலிருந்து பிறந்துள்ள சொல். எண்ணெயைப் பிழிந்த பிறகு கட்டியாக அமையும் பொருள் பிண்ணுக்கு எனப்பட்டது. இது ஆங்கிலத்தில் 1890-ஐ ஒட்டிய ஆண்டு களில் "பூனக்' என வழங்கத் தலைப்பட்டு அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. "புங்கம்' என்னும் மரப்பெயர் பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களிற் காணப்படு கிறது. புன்க மரத்து எண்ணெய் விளக்கு எரிப்பதற் கும், தோல்நோய்களைப் போக்குவதற்கும் பயன்படும் ஒரு வகை கெய். இந்த நெய்யைப் பற்றிய பேச்சு 1866-இல் ஆங்கிலத்தில் "புங்கா ஆயில் என எழுந்தது.