பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

的 குறுந்தொகை பழந்தமிழ்ப் புலவர்கள் பாடிய செய்யுட்களைப் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என மூன்று பெருந்தொகுதிகளாக அமைந்திருக்கக் காண்கி ருேம். குறுங்தொகை அத்தொகுதிகளில் எட்டுத்தொகை யில் அடங்கும். இதனை நல்ல குறுந்தொகை எனப் பழ மையோர் பாராட்டியிருக்கிருர்கள். இந் நூலில் நானூறு பாடல்கள் உண்டு. நானூறு பாடல்களையும் ஒருவரே இயற்றவில்லே பலர் இயற்றியுள்ளனர். வேலினையுஞ் சேவற் கொடியினையும் உடைய முருகக் கடவுள் பாதுகாப் பதால், உலகம் இடையூறின்றி இருக்கிறது என்ற கருத் தமைந்த கடவுள் வாழ்த்துச் செய்யுளே முதற்கண் வைத்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் முழுதும் அகத்திணைச் செய்திகளே கூறப் பட்டுள. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபடும் இன்பமும், அவ்வின்பத்திற்கு இடையூருய் இருப்பனவும், காதல்வெற்றியும், இல்லறவொழுக்கமும் தலைவன் தலைவி யிடைப் பிரிவும் பிரிவில் ஆற்றியிருத்தலும், பிரிவில் துயர முறுதலும், ஊடலும், கூடலும் ஆடவர் மகளிர் மனவுறுதி யும் இந்நூலிற் கூறப்படும் சிறந்த செய்திகள். இதனுள் உள்ள பாக்கள் எல்லாம் நான்கு முதல் எட்டடிக்குள் அமைந்தவை. உதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரை யில் அமைந்த பாக்காேக் கொண்ட அகநானூறு 'கெடுங் தொகை' எனக் கூறப்படுவதை நோக்கிக் குறுகிய அடி களேயுடைய இந்நூல் குறுந்தொகை எனப்படுவதாயிற்று.