பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o செங்கோல் வேந்தர் தால் என் தாய் வீட்டிலே கொண்டுபோய் விட்டுவிடுக” என்று கேட்க விரும்புகிருள் இன்ைெரு தலைவி. "நீர் டாடிற் கண்னுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ” என்றதாக அப்பாட்டு வருகிறது. இத்தலைவி ரீ கோபித் த்ால் நான் தாயார் வீட்டுக்குப் போவேன் என்று சொல்ல வில்லை. 'எங்கள் வீட்டிலே கொண்டுபோய்ச் சேர்ப்பா யாக எனக் கூறுகிருள். உய்த்தல் என்ற சொல்லிற்குக் கொண்டு போய்ச் சேர்த்தல் என்பது பொருள். வீடு வரையிற் கொண்டுபோய் விட்டுவிட்டு உட்புகாமலே தலை வன் ஓடிவருதல் முடியாது. ஏனென்ருல், தலைவி இல் லுய்த்துக்கொடு எனக் கேட்கிருள். ஆதலால், வீட்டிற் கொண்டுசேர்த்து என் தந்தையிடம் என்னை ஒப்படைப் பாயாக எனக் கூறுகிறவள் "கொடு எனக் கூறுகிருள். இதில் எத்துணை நயம் இருக்கிறது: "தாய்வீடு போகி றேன்” என்ருலே போகாதே’ எனத் தலைவன் தடுத்து விடுவான். ஆதலால், தலைவி தாய்வீடு போதல் இல்லை. "உடன் வா’ என்றதால் உடன் செல்லுகின்றவன் தலைவி யின் மனத்திலுள்ள பிணக்கத்தை வழியில் மாற்றிவிடக் கூடும். ஆதலாலும், தாய்வீடு போதல் இல்லை. வீட்டிற் கொண்டுபோய் விடுத்த அளவே அல்லாமல், தலைவியின் தந்தையிடம் அவளைச் சேர்ப்பித்துவரத் தலைவன் கூக வான், காணுவான். அஞ்சுவான். ஆதலாலும் தாய்வீடு போதல் இல்லை. எனவே, "எம் இல் உய்த்துக் கொடுமோ” என்று தலைவி கூறியது வெறும் மருட்டல். உண்மையில், தாய்வீடு திரும்ப அவளுக்கு ஆசையில்ல்ை. கணவனுடன் இருக்கவேண்டும் என்பதே அவள் விருப்பம். ஆனால், கணவனைத் தன்வழிப்படுத்தவே இச்சொல் எழுகிறது. “எம் இல் உய்த்துக்கொடுமோ” எனக்கூறி 'என்னைத் தகப்பஞரிடம் சேர்த்துவிட்டுத் திரும்புக, உமக்கு அங்கு வேலையில்லே’ என்பாள் போல, “எம் இல் என வைத்துப்