பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கீரர் ஆவித்திறன் . #5 ைேறய உண்டு. அந்தத் தெரு வழியே செல்கிறவள் வாளே னே விற்றுக் கள்ளைக் கொள்ள விரும்பாமல் மேலே கடந்து செல்கிருள் என்ற குறிப்பு பாட்டின்கண் உள்ளது. அத் தெருவிற் பழைய செந்நெல்லைக் குவித்து கிறைய வைத் திருப்பவர்கள் உண்டு. அவர்களிடம் வாளைமீனே விற்று நெல்லைத் தன் அன்றைய தேவைக்கு என வாங்காமல் திரும்பு கிருள் என்ற குறிப்பும் இங்கே இருக்கிறது. அதனல் அவள் இயல்பாகவே செல்வம் ஒரளவுடைய குடி ஒன்றினைச் சார்ந்தவள் என்பதும், அன்றன்றைய தேவைக்கு நெல்லைப் பெற்று வரவேண்டிய நிலையில் உள்ளவள் அல்லள் என் பதும் குறிப்பிக்கப்படுகின்றன. இவற்றிற்கு மாருக அவள் அரும்பெறல் முத்துக்களேப் பெற்றுத் திரும்புகிருள். ஒவ்வொரு முத்தின் விலையோ அதிகம். எனினும், ஒரு முத் தைப் பெறுதற்குரிய அளவு வாளைமீனை அவள் நாடோறும் விற்கவில்லையாயினும், சில நாட்கள் வாளைமீன. ஒரே வீட்டிற் சேர்த்து சேர்த்துக் கொடுத்துப் பணத்தை கிறுத்தி வைத்திருக்கிருள் ஆதலால், சில நாட்கள் கழித்துப் பிற்பாடு முத்துக்களோடு நல்ல அணிகலனைப் பெறக்கூடிய அளவிற் சேமிப்பு செய்யக் கூடியவாறு தகுதியும் மனவுறுதியும் அவள் உடையவள் என்பது எத்துனே இயம்படக் கவிஞர் நக்கீரராற் காட்டப்பட்டுள்ளதென்பது அடியில் வரும் அகநானூற்றுப்பகுதியால் தெரியவரும்: .. "...தன் ஐயர் காலைத் தந்த கனைக்கோட்டு வாளைக்கு அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கும் கறவுமவி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு கன்கலம் பெறு உம் பயங்கெழு வைப்பு................................” சில சொற்களாற் பல அரிய கருத்துக்களைப் பெருங் கவிஞர்கள் அமைத்துத் தந்துவிடுவார்கள் என்பதன்