பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில்க்கிய மகவு 23. மார்பிலனைத்து முத்தமுண்ணலாலும், எடுத்துத் தழுவலா லும், கையில் வாங்கிக்கொள்ளலாலும் வருவதோர் ஊற்றின் பத்தை உற்ருர் உளர் என்பது தெளிவாகின்றது. இவற்றை யெல்லாம் கவிஞர் பாரதியாரும் தமது "கண்ணன்-என் குழந்தை” என்ற தலைப்பின்கீழ்த் தந்துள்ளார். 'சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே உச்சிதனை முகந்தால்-கருவம் - ஓங்கி வளருதடி - கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா உன்மத்த மாகுதடி ' என்னும் அடிகளை நோக்குக. மெய்திண்டலால் வரும் இன்பம் இன்னணம் இயம்பப் பட்டுள்ளதுபோல், மகாரின் மழலைமொழியால் வரும் இன்ப மும் மொழியப்பட்டுளது. தத்தம் மக்களுடைய மழலைச் சொற்களேக் கேட்டிராதவர் அன்ருே குழலினிது யாழினிது என்று கூறுவர் என்கிருர் நாயனுர், 'யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு அருள்வந்தனவால் புதல்வர்தம் மழலை’ என உரைத்துள்ளார் ஒளவைப்பிராட்டியார். புதல்வர் தம் மழல்ை இனிது என்ருராயினும், இனம்பற்றிப் புதல்வி யார் மழலையும் இனிது என்ருர் எனக்கோடலே சிறப்பு டைத்து. ஆனல், மகாரின் மழலை யாழொடு ஒவ்வாவிட் டாலும்' என்று பொருள்படும்படி 'யாழொடுங் கொள்ள ஆயினும் என்று கூறிய அவர் வாக்கு காயனரின் வாக்குக்கு ஒவ்வாது என்பதில் ஐயமுண்டோ? பிள்ளை யொன்றும் பெற்றிலா அப்பிராட்டியார் தம்பிள்ளே சொல்லைக் கேட்டி ருக்க முடியாதன்ருே? தம் பிள்ளே சொல்லைக் கேளாத