தமிழிலக்கிய மிகவு 31 அவளது மகவு அழுதது என்றும், அஃதழுவதைக் கண்டு அவள் அழுதழுது வருந்தினள் என்றும் அப்பாட்டினல் அறிகின்ருேம். இதற்கெதிராக "பாலோடு விம்மிப்பெருத்த ங்கிலே"ப் பெற்றிருந்த பெண்டிரும் உண்டு என்பதற்குச் சான்று கலித்தொகைச் செய்யுட்களிற் கிடைக்கின்றது. இவற்றையெல்லாம் ஒருபுறம் வைத்து, மற்ருெருபுறமாக காமெல்லாம் மகார் என்றும், நமக்கெல்லாம் தாயாவான். இறைவனென்றும், அவனருளே தாய்ப்பாலென்றும், அருே காடி அழ வல்லரல்லா நம்முட் சிலர்க்கும் அவனருள் இட்டு மென்றும், விம்மி விம்மிக் கொள்ளும் மகாரிலரே என அவன் அருளொடு வருந்தி நிற்பது.உண்டென்றும், அவனருள் ஒருகால், மறைந்து கடுமையே.தோன்றுவ தாயினும் அவனேயே:அம்மையேயப்பா' என அழைத்தல் முறையென்றும் கண்டு கோடல் கற்றறிந்த மாந்தர் கடன். 'செருகரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ைப் பயந்தி செம்மலோர் இம்மையின்பமும் மறுமையின்பமும் எய்துவர் என்று பல நூல்கள் தமிழ் மொழியிற் கூறக் காண்கின்ருேம். மறுமையுலகத்தைப் பொறுத்தது எவ்வா ருயினும், இம்மையில் மகாரால் வரும் பயன் பெரிதாக உளது என்பதில் ஐயமில்லை. அவரால் 'இவர்தங்தை என்னெற்ருர் கொல்’ எனும் இசைமொழி யுண்டாகிறது பற்பல வேளைகளில். அஃதன்றியும், வேறு சில பயன் களும் உள எனக்காட்டுவன போலுள சில இலக்கியப் பகுதிகள். தலைவியின் ஊடலைத் தீர்க்க வல்ல மருந்தினுள் ஒன்று புதல்வைேடு தலைவன் புகுதரல் என்று தொல் காப்பியம், இறையனர் களவியல் முதலிய இலக்கணங்கள்ால் உணர்கிருேம். கண்ணுடை மணியாைெடு நீ வர ஊடற் சிவப்பொழிந்து மலர்ந்தனவே” எனத் தோழி தலைவற்குக் கூறிய கூற்ருக வரும் கோவையாரடிகளைக் காண்க. தலைவன் ஒருவன் பரத்தையிடஞ் சென்று திரும்பி வருகின்ருன்..அவன் வந்து நிற்பது தெரியாமல் குழவியுடன் விளேயாடுகிருள் தலைவி. “ஞாயர்பால் நீ கற்ற சொல் சில
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
