பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. క్షీ செங்கோல் வேந்தர் வுடன் தந்தையார் தேரை வீட்டுக்குத் திருப்பச் சொன்னர். இறங்கி வந்து, குழந்தையை யெடுத்துப் புல்லி "செல் அப்பா உள்ளே' எனச்சொல்லிப் பார்க்கிருர், மகன் கேட் கிருனில்லை. என் செய்வார் பெரியவர் பாவம்! அவனைத் ஆரக்கித் தோளில் வைத்துக்கொண்டு உள்ளே வருகிருர். உள்ளே உள்ள அம்மைதான் குழவியைக் கிள்ளிவிட்டது, தந்தை வெளியே செல்கிருரென்று. எங்கே தனது வேலை தெரிந்துவிடுமோ என்று. சட்டென ஒரு கோலொடு இப் பொழுது வருகிருள். 'என்னடா, பயலே, இப்படியா போய்த்தடுக்கிறது அவரை? வெளியிலே என்ன வேலையோ! என்ன அவசரமோ போகிற அவரைப் போய்த் தடுக்கவும் ஆயிற்ரு' என்று அடிக்க வருபவள் போற் கூறுகிருள். தந்தையார் குழவியர்ருக்கு வருந் துன்பத்தைக்கண்டு, போவதை ஒத்தி வைக்கிருர். பின்னர்ப் போகவுமில்லை. ஆ! இக்குழந்தை தாய்தந்தைக்குச் செய்த உதவியை கினைத்து உருகாமல் இருக்க முடியவில்லை. குழந்தையாற் பயனென் என்பார் பார்க்கட்டும் இக்தகைய விளையாட்டுகளே! இதற் காகத்தானே, இவ்விரண்டையும் அக கானூற்றுப்பாடல் களிலே வைத்தளித்துள்ளார்கள்! மற்ற தமிழ் நூல் களையும் காணின், இவரனைய மகாரைக் காணுதிருக்க முடியாதென்பது திண்ணம். அவர்தம்மை அன்பர்களே கண்டறிந்து மகிழ்வார்களாக!